IPL 2025: ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..? பிளே ஆஃப் இடம் மாற்றமா..? கிடைத்த தகவல்கள்!

IPL 2025 Restart: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களுக்குப் பின்னர், ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்க உள்ளது. மே 16 அல்லது 17 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும். பிளே-ஆஃப் போட்டிகளின் இடம் மாற்றம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL 2025: ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..? பிளே ஆஃப் இடம் மாற்றமா..? கிடைத்த தகவல்கள்!

ஐபிஎல் 2025 மீண்டும் தொடக்கம்

Published: 

12 May 2025 08:00 AM

இந்தியா பாகிஸ்தான் இடையிலான (India Pakistan Tensions) சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, ஐபிஎல் 2025 (IPL 2025) மீண்டும் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஐபிஎல் 2025 போட்டிகள் 2025 மே 16 அல்லது 17ம் தேதி மீண்டும் தொடங்கலாம் என்றும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும் மோதலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராக இருக்கும்படி ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

4 நகரங்களில் போட்டிகள்:

கிடைத்த தகவலின்படி, ஐபிஎல் 2025 அடுத்த வாரம் முதல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் குறித்த 4 நகரங்களில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியை மீண்டும் தொடங்குவது குறித்து அனைத்து அணிகளின் உரிமையாளர்களிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து அணிகளும் அனைத்து வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்களை விரைவில் திரும்ப அழைக்க உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மே 13ம் தேதிக்குள் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பெங்களூரு ஸ்டேடியத்திற்கு செல்லவும், அதேநேரத்தில் மற்ற அணிகளும் அவரவர் ஸ்டேடியத்திற்கு செல்வார்கள்.

பிளே ஆஃப் சுற்றுக்கான இடம் மாற்றமா..?

ஐபிஎல் 2025 பிளே ஆஃப் ஸ்டேடியத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னதாக, போட்டி தற்காலிக நிறுத்தப்படுவதற்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தகுதிச் சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடத்தப்பட இருந்தன. இரண்டாவது தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறவிருந்தது. ஆனால், தற்போது, தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் இரண்டின் இடத்திலும் எந்த மாற்றமும் இருக்காது, ஆனால் இறுதிப் போட்டியை கொல்கத்தாவிற்குப் பதிலாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், மீதமுள்ள அனைத்து போட்டிகளும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியம், பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த பிசிசிஐ ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகிறது.