IND vs ENG 1st Test, 1st Day Records: இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் முத்திரை.. பல்வேறு சாதனைகளை குவித்த இந்திய அணி!

India's Dominant Day 1: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (127*) ஆகியோர் சதம் அடித்தனர். ரிஷப் பண்ட் 65 ரன்கள் எடுத்தார். இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால்-கில் ஜோடி முதல் நாளில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் பெற்றது.

IND vs ENG 1st Test, 1st Day Records: இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் முத்திரை.. பல்வேறு சாதனைகளை குவித்த இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

21 Jun 2025 11:17 AM

இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG 1st Test) முதல் டெஸ்டின் முதல் நாள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) ஆகியோர் சதம் அடிக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 101 ரன்களுடன் ஆட்டமிழக்க, கேப்டன் கில் 127 ரன்களுடன் இன்னும் ஆட்டமிழக்காமல் உள்ளார். துணை கேப்டன் ரிஷப் பண்ட்டும் 65 ரன்கள் எடுத்துள்ளார். இந்திலாந்து அணிக்கு எதிரான முதல் நாளில் 359 ரன்கள் எடுத்து இந்தியா பல சாதனைகளை முறியடித்தது. அதனை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

முதல் நாளில் 2 சதம்:

இந்த சாதனைகளில் ஒன்று முதல் நாளில் 2 சதங்கள் பதிவானதுதான். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தது இதுவே முதல் முறை. ஒட்டுமொத்தமாக இந்திய அணி அந்நிய மண்ணில் 3வது முறையாக பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை ஜெய்ஸ்வால் – கில் படைத்தனர். 93 ஆண்டுகால வரலாற்றில் இது முதல் முறையாகும். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஜோடி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்தது. அதேபோல், கடந்த 2017ம் ஆண்டு ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் ஜோடி இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் நாளிலேயே சதம் அடித்திருந்தனர்.

கேப்டனாக முதல் டெஸ்டில் சதம்:

கேப்டனாக தனது முதல் போட்டியில் விளையாடும்போது முதல் இன்னிங்ஸில் சதமடித்த இந்திய அணியின் 5வது கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். இவருக்குமுன்பு, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார்  மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி:

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது லீட்ஸில் இந்தியாவில் இருந்து ஒரு தொடக்க ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இந்த ஜோடிக்கு முன்பு, இந்த பெரிய சாதனை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. 1986 ஆம் ஆண்டு இதே ஸ்டேடியத்தில் இன்னிங்ஸைத் தொடங்கும்போது இவர்கள் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Related Stories
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?
Virat Kohli: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!