Indian Cricket Team Records: ஆசியக் கோப்பை ஆடுகளத்தில் அடுக்கப்பட்ட சாதனை.. வரலாறு படைத்த இந்திய அணி!
India vs UAE: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2025 ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வியக்க வைக்கும் அளவில் வெற்றி பெற்றது. குறைந்த பந்துகளில் (27 பந்துகள்) வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணி
2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டியை சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி வலுவாகத் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எளிதாக வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முற்றிலும் ஒருதலைப்பட்சமாக வென்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 13.1 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து 58 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நிர்ணயித்த 58 ரன்கள் இலக்கை அடைய இந்திய அணிக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்த ஸ்கோரை துரத்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்த போட்டியில் மூன்று சாதனைகளை இந்திய அணி படைத்தது. இந்த சாதனைகள் இப்போது கிரிக்கெட்டில் வரலாறாக மாறியுள்ளது.
குறைந்த பந்துகளில் வெற்றி:
இந்திய அணி அதிக பந்துகளைத் தக்கவைத்து ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா 27 பந்துகளில் வெற்றியை பெற்று, 93 பந்துகளைத் தக்கவைத்துக்கொண்டது. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 81 பந்துகளைத் தக்கவைத்துக்கொண்டு வென்றது. இதுவே இந்தியாவின் முந்தைய சாதனையாகும். உலக அளவில் இதுபோன்ற சாதனையை எட்டிய இரண்டாவது அணி இந்தியா. முன்னதாக, 2024ம் ஆண்டு ஓமனுக்கு எதிராக இங்கிலாந்து 101 பந்துகளைத் தக்கவைத்துக்கொண்டு வென்றிருந்தது. 2014 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 90 பந்துகளைத் தக்கவைத்துக்கொண்டு வென்றிருந்தது, நைரோபியில் மொசாம்பிக்கிற்கு எதிராக ஜிம்பாப்வே 90 பந்துகளைத் தக்கவைத்துக்கொண்டு வென்றிருந்தது.
ALSO READ: 27 பந்துகளில் இலக்கை எட்டிய இந்திய அணி.. யுஏஇ அணியை துவம்சம் செய்த SKY படை!
குறைந்த பந்துகளில் முடிந்த டி20 போட்டி:
#DPWorldAsiaCup2025 | #INDvsUAE
Captain Suryakumar Yadav’s heart winning gesture.
– Calls the batsman back to the crease and withdraws the appeal of the wicket.pic.twitter.com/Yj3Decu5mR
— Kshitij (@Kshitij45__) September 10, 2025
ஒரு டி20 போட்டி குறைவான பந்துகளில் முடிவடைவது இது நான்காவது முறையாகும். முன்னதாக, 2014ல் இலங்கை-நெதர்லாந்து போட்டி 93 பந்துகளில் முடிந்தது. பின்னர் 2024ல் ஓமன்-இங்கிலாந்து போட்டி 99 பந்துகளில் முடிந்தது. 2021ல் நெதர்லாந்து-இலங்கை போட்டி 103 பந்துகளில் முடிந்தது. இப்போது இந்தியா-யுஏஇ போட்டி 106 பந்துகளில் முடிவடைந்துள்ளது.
ALSO READ: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!
முதல் பந்தில் சிக்ஸர்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியின் முதல் பந்திலேயே இந்தியாவின் அபிஷேக் சர்மா சிக்ஸர் அடித்தார். டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது இந்திய வீரர் இவர்தான். ரோஹித் சர்மா 2021-ல் அடில் ரஷீத்துக்கு எதிராகவும், 2024-ல் சிக்கந்தர் ராசாவுக்கு எதிராகவும், 2025-ல் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராகவ்யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹைதர் அலிக்கு எதிராக தற்போது அபிஷேக் சர்மாவும் இந்த சாதனையை படைத்தார்.