Sourav Ganguly: ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல.. தேர்வுக்குழுவை சாடிய சவுரவ் கங்குலி!

India's 2025 England Tour: சவுரவ் கங்குலி, இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேர்வுக்குழுவின் தவறுகளை சுட்டிக்காட்டி, ஜஸ்பிரித் பும்ராவை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் எனவும், ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை சுட்டிக்காட்டி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Sourav Ganguly: ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல.. தேர்வுக்குழுவை சாடிய சவுரவ் கங்குலி!

ஷ்ரேயாஸ் ஐயர் - சவுரவ் கங்குலி

Published: 

11 Jun 2025 15:49 PM

 IST

வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் (India vs England Test Series) தொடங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி  மற்றும் ரோஹித் சர்மா ஏற்கனவே ஓய்வுபெற்ற நிலையில், பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்தியாவின் தோல்வியை கணித்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையில் இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தேர்வுக்குழு முக்கிய வீரரை தவறவிட்டதாக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) சாடியுள்ளார்.

பும்ராவை இப்படி பயன்படுத்துங்கள்:

ரெவ்ஸ்போர்ட்ஸிடம் பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, “ஜஸ்பிரித் பும்ரா உங்களுக்கு சரியான பந்துவீச்சாளர். இந்திய கேப்டன் சுப்மன் கில் பும்ராவை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். அவரை விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளராக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 12 ஓவர்களுக்கு மேல், பும்ராவை பந்து வீச வைக்காதீர்கள். அதேநேரத்தில் மற்ற பந்து வீச்சாளர்கள் முன்வரட்டும். பும்ராவிற்கு அதிக அழுத்தத்தை கொடுக்காமல் விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளராக மட்டும் பயன்படுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலைமைகளில் இங்கிலாந்து சிறந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா நன்றாக பேட்டிங் செய்து ஜஸ்பிரித் பும்ராவை நன்றாக பயன்படுத்தினால், இங்கிலாந்து மணி அவர்களது மண்ணில் சிறந்த அணியாக இருந்தாலும், இந்தியா வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.

தேர்வுக்குழுவை சாடிய கங்குலி:

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதபோது, இளம் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. சுப்மன் கில், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர் வலுவான பேட்டிங் லைனாக உள்ளது. என்னை பொறுத்தவரை, இவர்கள் அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பு, எந்த அழுத்தமும் இல்லை. இந்த சூழ்நிலைகளை சவாலாக இருக்கும். இருப்பினும், உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயரை சேர்க்காததற்காக தேர்வாளர்களை குறிவைத்த சவுரவ் கங்குலி, “ ஷ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட வேண்டிய வீரர் அல்ல. கடந்த ஒரு வருடமாக அவர் தனது சிறந்ததைக் கொடுத்து வருகிறார், அவர் அணியில் இருந்திருக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் இப்போது அழுத்தத்தின் கீழ் நல்ல இன்னிங்ஸ்களை விளையாடுகிறார், பொறுப்புகளைப் புரிந்துகொள்கிறார், மேலும் குறுகிய பந்துகளில் அதிக ரன்களை குவிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வேறுபட்டது என்றாலும், அவர் இந்த தொடரில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், இதனால் அவர் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்க்கலாம்.” என்றார்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..