India – Pakistan: முடிவுக்கு வந்த கைகுலுக்கல் சர்ச்சை! ஹாக்கி போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் ஹை-ஃபைவ்!

India - Pakistan Hockey Game: மலேசியாவின் ஜோகூர் பாருவில் நடந்த சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.  இதன்மூலம், இரு அணிகளும் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டன.

India - Pakistan: முடிவுக்கு வந்த கைகுலுக்கல் சர்ச்சை! ஹாக்கி போட்டியில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் ஹை-ஃபைவ்!

இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள்

Published: 

14 Oct 2025 20:25 PM

 IST

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை (Sultan Johor Cup Hockey 2025) ஹாக்கி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (India – Pakistan) இன்று அதாவது 2025 அக்டோபர் 14ம் தேதி விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்பு, இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக்கொண்டனர். இதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதட்டங்களை தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் 3 முறை மோதியது. இதில், ஒரு போட்டியில் கூட இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.  இதனை தொடர்ந்து, கைகுலுக்கல் சர்ச்சை 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்தியா – பாகிஸ்தான் வீராங்கனைகளி கைகுலுக்கி கொள்ளவில்லை.

ALSO READ: ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த கோலி.. ஆர்சிபி அணிக்காக விளையாட மாட்டாரா?

முடிவுக்கு வந்த கைகுலுக்கல் சர்ச்சை:


மலேசியாவில் தற்போது நடைபெற்றபோது சுல்தான் ஜோகூர் கோப்பை போட்டிக்கு வந்தபோது, ​​போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஹை-ஃபைவ்களை பரிமாறிக்கொண்டனர். பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் “கைகுலுக்கக் கூடாது” என்ற சூழ்நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி கைகுலுக்க மறுத்தால் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிக்கவும், இந்திய வீரர்களுடன் எந்தவிதமான உணர்ச்சிகரமான வாக்குவாதங்கள் அல்லது மோதல்களைத் தவிர்க்கவும் கூறப்பட்டது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் விளையாட வரவில்லை. அதன் காரணமாக, இந்த போட்டியானது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஹாக்கி போட்டிகள் மலேசியாவில் நடத்தப்பட்டது.

ALSO READ: ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுப்பு.. தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பிய முகமது ஷமி!

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெற்றது யார்..?

மலேசியாவின் ஜோகூர் பாருவில் நடந்த சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.  இதன்மூலம், இரு அணிகளும் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டன. தமாம் தயா ஹாக்கி மைதானத்தில் நடந்த ஒரு விறுவிறுப்பான போட்டிக்குப் பிறகு இரு அணிகளும் கைகுலுக்கிக்கொண்ட புகைப்படங்களிள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானத்துடன் விவாதத்தை கிளப்பி வருகிறது.