Neeraj Chopra: பாரீஸ் டயமண்ட் லீக்.. பட்டம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!

பாரீஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றுள்ளார். முதல் சுற்றிலேயே அசத்திய அவர், மற்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை ஜெர்மனியின் ஜூலியன் வெபர் பெற்றார்.

Neeraj Chopra: பாரீஸ் டயமண்ட் லீக்.. பட்டம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!

நீரஜ் சோப்ரா

Published: 

21 Jun 2025 08:50 AM

 IST

பாரீஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பட்டம் வென்று சாதனைப் படைத்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும், விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 27 வயதான நீரஜ் சூப்பரா தனது முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அம்பேன் பட்டத்தை வென்றார். 90 மீட்டர் இலக்கு கொண்ட இந்த போட்டியில் ஐந்து வீரர்கள் பங்கேற்றனர். அவர்களின் முதலாவதாக நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார். இரண்டாவதாக ஜெர்மனியில் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் ஈட்டி எறிந்தார். மூன்றாவது இடத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த மௌரிசியோ லூயிஸ் டா சில்வா பெற்றார். இவர் 86.62 மீட்டர் தூரம் 8 எறிந்தார்.

நீரஜ் சோப்ரா பின்னர் தனது இரண்டாவது சுற்றில் 85.10 மீட்டர் தூரம் எறிந்தார். அவரது மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது முயற்சிகள் தவறுகளாக மாறிய போதிலும், தனது இறுதி முயற்சியில் 82.89 மீட்டர் தூரம் எறிந்து தனது வெற்றியை உறுதி செய்தார்.  தோஹா டயமண்ட் லீக் 2025 மற்றும் போலந்து தொடர்களில் ஜூலியன் வெபரிடம் தோற்ற நீரஜ் சோப்ரா இம்முறை அந்த தோல்விக்கு பழிவாங்கும் வகையில் வெற்றி வாகை சூடியுள்ளார். ஒலிம்பிக் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் டயமண்ட் லீக்கில் பட்டம் வென்று வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரஜ் சோப்ரா வெற்றி பெற்ற தருணம்

லொசேன் டயமண்ட் லீக்கில் 89.49 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ரா, தோஹாவில் நடைபெற்ற தொடரிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருக்கு ஒரு பெருமைமிக்க தருணமாக அமைந்துள்ளது. வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா, “எனது ஈட்டி எறிதலில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனது ஓட்டம் மிகவும் வேகமாக இருந்தது. எனது வேகத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் முடிவில் முதல் இடத்தைப் பிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா கிளாசிக் தொடர்

போட்டியின் நடுவில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா பெற்ற புள்ளிகள்தான் அவரது வெற்றியை உறுதியாக காரணமாக அமைந்தது. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர் ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக் தொடக்க பதிப்பில் விளையாட உள்ளார். இந்தத் தொடரானது கடந்த 2025 மே 24ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய பதட்டங்கள் இருந்ததால் இப்போது ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.