T20 World Cup 2026 Warm Up: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் 5 நாட்கள்.. பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி!
India Warm Up Match T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டிகள் 5 நாட்கள் நீடிக்கும். வருகின்ற 2026 பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, 6 அணிகள் மோதும். பின்னர், வருகின்ற 2026 பிப்ரவரி 3ம் தேதி 3 போட்டிகள் நடைபெறும்.

இந்திய அணி
2026 டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2026) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக, 4 நாட்களுக்கு முன்பு 16 டி20 பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2 இந்திய அணிகள் (Indian Cricket Team) பங்கேற்கும் பயிற்சி போட்டிகளின் அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியா ஏ மற்றும் இந்திய அணி பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும். அட்டவணையின்படி, இந்தியா ஏ இரண்டு போட்டிகளில் விளையாடும், 2ம் நவி மும்பையில் நடைபெறும். வருகின்ற 2026 பிப்ரவரி 4ம் தேதி நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இந்திய அணி விளையாடும்.
2026 டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டி அட்டவணை:
Team India to play 2 warm up matches ahead of the T20 World Cup 🇮🇳🏆 pic.twitter.com/vCccWoi4J3
— CricXtasy (@CricXtasy) January 28, 2026
டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டிகள் 5 நாட்கள் நீடிக்கும். வருகின்ற 2026 பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, 6 அணிகள் மோதும். பின்னர், வருகின்ற 2026 பிப்ரவரி 3ம் தேதி 3 போட்டிகள் நடைபெறும். 2026 பிப்ரவரி 4ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் தலா ஒரு போட்டியில் விளையாடும். கொழும்பில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடும்.
ALSO READ: விரைவில் டி20 உலகக் கோப்பை.. பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு போகும் 5 முக்கிய போட்டிகள்!
2026 டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிக்கான அட்டவணைகள்:
2026 பிப்ரவரி 2:
- ஆப்கானிஸ்தான் vs ஸ்காட்லாந்து – பெங்களூரு
- அமெரிக்கா vs இந்தியா ஏ- நவி மும்பை
- கனடா vs இத்தாலி – சென்னை
2026 பிப்ரவரி 3:
- ஓமன் vs இலங்கை ஏ – கொழும்பு
- நெதர்லாந்து vs ஜிம்பாப்வே – கொழும்பு
- நேபாளம் vs அமெரிக்கா – சென்னை
2026 பிப்ரவரி 4:
- ஸ்காட்லாந்து vs நமீபியா- பெங்களூரு
- ஆப்கானிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ் – பெங்களூரு
- பாகிஸ்தான் vs அயர்லாந்து, கொழும்பு
- இந்தியா vs தென்னாப்பிரிக்கா, நவி மும்பை.
2026 பிப்ரவரி 5:
- ஜிம்பாப்வே vs ஓமன், கொழும்பு
- நேபாளம் vs கனடா, சென்னை
- ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து, கொழும்பு
- நியூசிலாந்து vs அமெரிக்கா, நவி மும்பை.
2026 பிப்ரவரி 6:
- இத்தாலி vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சென்னை
- நமீபியா vs இந்தியா ஏ, பெங்களூரு
ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!
2026 டி20 உலகக்கோப்பையில் இடம்பெற்றுள்ள அணிகளின் விவரம்:
- குழு A-வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் உள்ளன.
- குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.
- குழு C-ல் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும்.
குழு D-ல் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.