Asian Hockey Cup 2025: ஆசிய கோப்பை ஹாக்கியில் 4வது முறை சாம்பியன்.. உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற இந்திய அணி!

World Cup Qualification: இந்திய ஹாக்கி அணி 2025 ஆசியக் கோப்பையை 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வென்றது. இது அவர்களின் 4வது ஆசியக் கோப்பை வெற்றியாகும். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம், 2026 உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தகுதியையும் இந்திய அணி பெற்றுள்ளது.

Asian Hockey Cup 2025: ஆசிய கோப்பை ஹாக்கியில் 4வது முறை சாம்பியன்.. உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற இந்திய அணி!

இந்திய ஹாக்கி அணி

Published: 

08 Sep 2025 20:00 PM

 IST

இந்திய ஹாக்கி அணி (Indian Hockey Team) மீண்டும் ஒருமுறை ஆசியக் கோப்பையில் (2025 Hockey Asia Cup) சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 8 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. ராஜ்கிரில் நடைபெற்ற போட்டியின் இறுதிப் போட்டியில், இந்திய அணி நடப்பு சாம்பியன் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக தோற்கடித்தது. இதன்மூலம், ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு FIH ஆண்கள் உலகக் கோப்பைக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

ALSO READ: கஜகஸ்தானை கதறவிட்ட இந்திய ஹாக்கி அணி.. 15-0 என்ற கணக்கில் அபார வெற்றி!

முழு சீசனிலும் ஆதிக்கம்:

பீகாரின் ராஜ்கிரில் முதன்முறையாக நடைபெற்ற 2025 ஆண்கள் ஹாக்கி ஆசியக் கோப்பை போட்டியின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், இந்த முழுப் போட்டியிலும் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் பட்டத்தை வென்றது. குரூப் ஸ்டேஜ் கட்டத்தில் இந்திய அணி தனது 3 போட்டிகளிலும் வென்றது. பின்னர் சூப்பர்-4 சுற்றில் 3 போட்டிகளில் 2-ல் வென்றது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா போட்டியை டிரா செய்தது. அந்த போட்டியில் கொரியாவுக்கு எதிராக இந்திய அணி  2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.

முதல் நிமிடத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கம்:

2025 செப்டம்பர் 7ம் தேதியான நேற்று தென் கொரியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்று, முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. கோல் அடித்தவரும், போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டவருமான சுக்ஜித், இந்திய அணிக்காக கோல் கணக்கை திறந்தார். இருப்பினும், இரண்டாவது கோலுக்காக இந்திய அணி நீண்ட நேரம் காத்திருந்தது. முதல் பாதி முடிவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு, தில்ப்ரீத் சிங் அணியை 2-0 என சமநிலைப்படுத்தினார்.

45வது நிமிடத்தில் ​​தில்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இது தில்ப்ரீத்தின் போட்டியின் இரண்டாவது கோலாகும். பின்னர், 50வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸின் கோல் அடிக்க, தென் கொரியா 57வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இருப்பினும், இந்த கோல் இந்திய அணிக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை.

ALSO READ: ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்.. இந்திய ஆண்கள் அணிக்கு குவியும் வாழ்த்து!

4வது முறையாக சாம்பியன்:


ஹாக்கி ஆசிய கோப்பை வரலாற்றில் 9வது இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி, 4வது முறையாக ஆசியக் கோப்பை பட்டத்தை வென்றது. இந்திய அணி கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேநேரத்தில், தென் கொரியா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முதலிடத்தில் உல்ளது. இதற்கு முன்பு, இந்த இரு நாடுகளுக்கும் இடையே 3 இறுதிப் போட்டிகள் நடைபெற்றன, அதில் தென் கொரியா 2 முறையும், இந்தியா 1 ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த பட்டத்தை வென்றதன் மூலம், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் 2026 உலகக் கோப்பைக்கும் இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Related Stories