Arshdeep Singh: இந்தியாவை கிண்டலடித்த ஹாரிஸ் ரவூப்.. களத்திலேயே பதிலடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்!

India vs Pakistan 2025 Asia Cup: 2025 ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதுவும் ஓமனுக்கு எதிரான லீக் ஸ்டேஜ் போட்டியாகும். இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை என்றாலும், ஹாரிஸ் ரவூப்பிற்கு தக்க பதிலடி கொடுத்தார்.

Arshdeep Singh: இந்தியாவை கிண்டலடித்த ஹாரிஸ் ரவூப்.. களத்திலேயே பதிலடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்!

ஹாரிஸ் ரவூப் - அர்ஷ்தீப் சிங்

Published: 

23 Sep 2025 19:01 PM

 IST

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4ல் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டி நடந்து 2 நாட்கள் கடந்தும், இதை பற்றிய பேச்சு இன்னும் நின்றதாக தெரியவில்லை. கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை தவிர வேறு செயல்களுக்காகவும் செய்திகளில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, கடந்த 2025 செப்டம்பர் 21ம் தேதி பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்களை வெறுப்பு ஏற்றும் வகையில் சில விஷயங்களை மேற்கொண்டனர். அதில், களத்திலேயே இந்திய இராணுவத்தின் ஏர் ஸ்ட்ரைக்களை கிண்டல் செய்யும் விதமாக ஹாரிஸ் ரவூப் (Haris Rauf) சைகை செய்தார். இருப்பினும், அதே போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பதிலளித்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: இந்தியாவிற்கு எதிரான தோல்வி..! மீண்டும் நடுவரை கைகாட்டும் பாகிஸ்தான்.. ஐசிசியிடம் புகார்!

வைரலாகும் அர்ஷ்தீப் சிங் வீடியோ:


2025 ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதுவும் ஓமனுக்கு எதிரான லீக் ஸ்டேஜ் போட்டியாகும். இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை என்றாலும், ஹாரிஸ் ரவூப்பிற்கு தக்க பதிலடி கொடுத்தார். வீடியோவில், அர்ஷ்தீப் சிங் கையில் விமானத்தை வீழ்த்தும் சைகையைச் செய்து, பின்னர் அவரது காலின் பின்புறத்தில் விழுந்ததுபோல் சைகை காட்டினார்.

பாகிஸ்தான் இராணுவம் இந்திய இராணுவத்தில் ஏர் ஸ்ட்ரைகளை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதாக எழுந்த வதந்தியை உண்மை என்னும் காண்பிக்க முயற்சி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பிற்கு செய்தார். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரின் போது ஆறு இந்திய ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், இதற்கு இந்திய இராணுவம் மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரத்தில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரத்தை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை.

இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி:

2025 ஆசிய கோப்பையின் குரூப் ஸ்டேஜ் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்தியாவின் அபிஷேக் சர்மா, முதல் பந்திலேயே ஷாஹீன் அப்ரிடியை சிக்ஸர் அடித்து போட்டியை தொடங்கினார். இங்கிருந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. பேட்டிங் பவர்பிளேயில் இந்தியா 69 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஜோடியான கில் மற்றும் அபிஷேக் 59 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

ALSO READ: எந்த அணி பைனலில்..? சிக்கி தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான்.. சுவாரஸ்யமாகும் சூப்பர் 4! 

சுப்மன் கில் 29 பந்துகளில் 47 ரன்களும், அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ரன்களும் குவிக்க, மீதமுள்ள வேலையை திலக் வர்மா 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.