IndvsNZ – 15 பந்துகளில் அரை சதம் அடித்து ஷிவம் துபே அசத்தல்

Shivam Dube : இந்தியா –நியூசிலாந்து போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரது வேகமான பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் வேகம் அளித்தது. தொடர் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த டூபே, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

IndvsNZ - 15 பந்துகளில் அரை சதம் அடித்து ஷிவம் துபே அசத்தல்

ஷிவம் துபே

Updated On: 

28 Jan 2026 22:57 PM

 IST

இந்தியா–நியூசிலாந்து போட்டியில் ஷிவம் துபே (Shivam Dube) அதிரடியாக விளையாடி வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரது வேகமான பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் உத்வேகம் அளித்தது. தொடர் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த டூபே, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக அரைசதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மூன்று நாட்களுக்கு முன்பு, அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார், இது இந்தியாவின் இரண்டாவது வேகமான அரைசதமாகும். சிவம் துபே தனது இன்னிங்ஸில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 50 ரன்களை எட்டினார்.

இந்தப் போட்டியில் சிவம் துபே 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அவரது புயல் வீசும் இன்னிங்ஸ் ரன் அவடட் மூலம் முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணி 63 ரன்களை எட்டுவதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது துபே இந்தப் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தார். அங்கிருந்து, துபே தனி ஒருவராக இந்திய அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் துபே 20 பந்துகளுக்குள் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறை.

இதையும் படிக்க : T20 World Cup 2026 Warm Up: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் 5 நாட்கள்.. பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி!

சிவம் துபே அதிவேக அரைசதத்திற்கு அபிஷேக் சர்மாவை சமன் செய்திருக்கலாம், ஆனால் இன்னிங்ஸின் நடுவில் ஒரு டாட் பந்தில் அவர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஜேக்கப் டஃபியின் பந்தில் ஒரு சிக்ஸருடன் 15 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை எட்டினார்.  இதனால்  தொடர் விக்கெட்டுகளால் இந்திய அணி தடுமாறிய நிலையில் ஆட்டத்தின் போக்கு இந்தியா பக்கம் திரும்பியது.

அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் லிஸ்ட்

  • 12 பந்துகளில் அரை சதம் அடித்த யுவராஜ் சிங்
  • 14 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா
  • 15 பந்துகளில் அரைசதம் அடித்த சிவம் துபே
  • 16 பந்துகளில் அரை சதம் அடித்த ஹார்திக் பாண்ட்யா
  • 17 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா

இதையும் படிக்க : T20 World Cup 2026: விரைவில் டி20 உலகக் கோப்பை.. பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு போகும் 5 முக்கிய போட்டிகள்!

ஷிவம் துபேவின் அதிரடி அரை சதம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு

 

இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடரைப் பொறுத்தவரை, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?