IND vs NZ 1st ODI: புதிய ஸ்டேடியத்தில் விளையாடும் இந்தியா – நியூசிலாந்து..! பிட்ச், வானிலை எப்படி இருக்கும்?
IND vs NZ ODI Series: இந்தியாவும் நியூசிலாந்தும் முதல் ஒருநாள் போட்டியை விளையாடவுள்ள வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2025 ஜனவரி 11ம் தேதி கிரிக்கெட்டுக்கு வானிலை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அறிக்கையின்படி, நாள் முழுவதும் வானம் தெளிவாகவும், வெயிலாகவும் இருக்கும்.

இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ ODI Series) இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று அதாவது 2026 ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் உள்ள பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். டாஸ் பிற்பகல் 1:00 மணிக்கு நடைபெறும். போட்டி தொடங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பாக பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். இந்திய ஆண்கள் அணி (Indian Cricket Team) இந்த ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, இந்த ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் தொடர் நடத்தப்பட்டது.
ALSO READ: இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி எப்போது..? எந்த நேரத்தில் நடைபெறும்?
ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி இருக்கும்?
உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் மகளிர் அணி போட்டிகளில் கடந்தகால சாதனையை கருத்தில் கொண்டு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில், இந்திய அணி 2 போட்டிகளில் 300 ரன்களை எளிதாகத் தாண்டியது. இதன்காரணமாக, ரன் குவிப்பு கொண்ட போட்டியாக இருக்கலாம்.
இதன் காரணமாக, டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம். இதற்குக் காரணம் பனி. இந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால், இரவில் பனி படிந்து, பந்தைப் பிடிப்பது கடினமாகிறது. இரண்டாவது இன்னிங்ஸில், பந்து பேட்டிங்கிற்கு எளிதாக வரும். மேலும் பந்து வீச்சாளர்கள் தங்கள் லைன் அண்ட் லென்த்தை பிடிப்பதை சிரமப்படுகிறார்கள். எனவே, டாஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியா – நியூசிலாந்து ஹெட் டூ ஹெட் சாதனை:
இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை மொத்தம் 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து 46 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 5 போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்தன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
வதோதராவில் வானிலை எப்படி இருக்கும்?
இந்தியாவும் நியூசிலாந்தும் முதல் ஒருநாள் போட்டியை விளையாடவுள்ள வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2025 ஜனவரி 11ம் தேதி கிரிக்கெட்டுக்கு வானிலை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அறிக்கையின்படி, நாள் முழுவதும் வானம் தெளிவாகவும், வெயிலாகவும் இருக்கும். பகலில் வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியஸாக இருக்கும், மாலைக்குள் சுமார் 13 டிகிரியாகக் குறையும். போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை, எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் முழு போட்டியையும் எந்தவொரு இடையூறு இல்லாமல் பார்க்கலாம்.
ALSO READ: இந்தியாவுடன் எதிர்ப்பு! வங்கதேச வீரர்களின் ஸ்பான்சர்ஷிப்பை முடிக்கும் முக்கிய நிறுவனம்!
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11:
ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11:
டெவன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜாக் ஃபௌல்க்ஸ், ஜோஷ் கிளார்க்சன், ஜெய்டன் லெனாக்ஸ், கைல் ஜேமிசன், ஆதித்யா அசோக்.