India vs England 4th Test: அடுத்தடுத்து 5 பேருக்கு காயம்.. 4வது டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

India playing XI Prediction: இந்தியா-இங்கிலாந்து 5 டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஜூலை 22 அன்று ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறுகிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஆகாஷ்தீப் ஆகியோரின் காயம் இந்திய அணிக்கு பெரும் சவாலாக உள்ளது. பண்ட் விளையாடும் சாத்தியம் குறைவு. சாய் சுதர்ஷன், துருவ் ஜூரல், ஷர்துல் தாக்கூர்/வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. அன்ஷுல் காம்போஜுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

India vs England 4th Test: அடுத்தடுத்து 5 பேருக்கு காயம்.. 4வது டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

22 Jul 2025 16:55 PM

 IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் (Ind vs Eng Test Series) கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நாளை அதாவது 2025 ஜூலை 22ம் தேதி  தொடங்குகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் (Old Trafford Cricket Ground) நடைபெறுகிறது. கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை இந்த ஸ்டேடியத்தில் இதுவரை இந்திய அணி எந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணிக்கு இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையெனில், இந்திய அணி இந்த தொடர் நழுவவிட்டுவிடும். இருப்பினும், இந்த போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு சாதாரணமான விஷயம் அல்ல.

முன்னதாக ஒன்றல்ல, இரண்டல்ல, பல அதிர்ச்சிகரமான செய்திகள் இந்திய அணியில் இருந்து வெளிவந்துள்ளன. தகவல்களின்படி, இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஆகாஷ்தீப் ஆகியோர் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை. இதனுடன், அர்ஷ்தீப் ஏற்கனவே காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பும்ரா புதிய வரலாறு படைப்பாரா? அக்ரத்தின் சாதனைகளை முறியடிப்பாரா?

ரிஷப் பண்ட் விளையாடமாட்டாரா..?


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பண்ட் ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்காக 4வது டெஸ்டில் விளையாடலாம். அதேநேரத்தில்,  துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக பீல்டிங்கில் களமிறங்கலாம். இந்த நேரத்தில், வழக்கம்போல இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்குவார்கள். இதன் பிறகு, சாய் சுதர்சனுக்கு 3வது இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும், ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இல்லாவிட்டால் மட்டுமே சாய் சுதர்சன் களமிறங்குவது சாத்தியமாகும்.

ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையேயான மான்செஸ்டர் டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. உண்மையில், மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டின் பிட்ச்சில் புல் இருக்கிறது. இதன் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு சிறப்பாக செயல்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஷர்துல் தாக்கூர் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால், வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். எனவே, வாஷிங்டன் சுந்தரை புறக்கணிப்பது என்பது இந்திய அணிக்கு இயலாத காரியம்.

4வது டெஸ்ட் போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆகாஷ்தீப் உடல் தகுதி பெறவில்லை என்றால் மட்டுமே காம்போஜ் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியும். ஆகாஷ்தீப் முழு உடல் தகுதியுடன் இருந்தால், அவர் விளையாடுவது உறுதி.

ALSO READ: புதிய மாற்றத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணி தாக்கு பிடிக்குமா..?

நான்காவது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் சாத்தியமான லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர்/வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அன்ஷ்தீப் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா

Related Stories
Asia Cup Rising Stars 2025: அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எங்கு காணலாம்?
IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
Australia vs England 1st Test: கம்மின்ஸ் காயம்.. கேப்டனாக ஸ்மித்.. ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து பிளேயிங் லெவன் எப்படி?
Shubman Gill: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?
ICC U19 World Cup 2026: இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!
Ind vs SA : 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?
வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?