India vs England 4th Test: 43 ஆண்டுகால வறட்சி! சாதிப்பார்களா பும்ரா, சிராஜ்..? ஓல்ட் டிராஃபோர்ட்டில் காத்திருக்கும் சாதனை!

Old Trafford Test: இந்தியா - இங்கிலாந்து 5 டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற உள்ளது. இந்தியா 2-1 என பின்தங்கியுள்ளது. இந்திய அணிக்கு இது கடைசி வாய்ப்பு. ஓல்ட் டிராஃபோர்டில் இந்திய பந்துவீச்சாளர்கள் மோசமான சாதனை படைத்துள்ளனர். பும்ரா, சிராஜ், தீப் ஆகியோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 1982க்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தலாம்.

India vs England 4th Test: 43 ஆண்டுகால வறட்சி! சாதிப்பார்களா பும்ரா, சிராஜ்..? ஓல்ட் டிராஃபோர்ட்டில் காத்திருக்கும் சாதனை!

பும்ரா - சிராஜ்

Published: 

17 Jul 2025 11:42 AM

 IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (India – England Test Series) இடையே தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இப்போது, இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 23ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி உயிர்ப்புடன் இருக்க இதுவே கடைசி வாய்ப்பாக உள்ளது. இருப்பினும், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது எளிதல்ல, ஏனெனில் இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி (Indian Cricket Team) மோசமான சாதனையை படைத்துள்லது. அதேநேரத்தில், ஓல்ட் டிராஃபோர்டில் 43 ஆண்டுகால வறட்சியை முறியடிக்க இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக உள்லது.

மான்செஸ்டரில் 4 இந்திய பந்து வீச்சாளர்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க சாதனை:

இதுவரை ஓல்ட் டிராஃபோர்டில் மான்செஸ்டர் ஸ்டேடியத்தில் 4 இந்திய பந்து வீச்சாளர்கள் மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதன்படி லாலா அமர்நாத், திலீப் தோஷி, வினோ மங்கட் மற்றும் சுரேந்திரநாத் உள்ளிட்ட இந்த பந்து வீச்சாளர்கள் மட்டுமே இத்தகைய சாதனையை வீழ்த்தியுள்ளனர். கடைசியாக 1982ம் ஆண்டு திலீப் தோஷி இந்த சாதனையை நிகழ்த்தியபோது, ஒரு இந்திய பந்து வீச்சாளர் இங்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு, ஓல்ட் டிராஃபோர்டில் எந்த இந்திய பந்து வீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

இப்போது, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ் ஆகியோரில் யாராவது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், 1982 க்குப் பிறகு இந்த ஸ்டேடியத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.

ALSO READ: முதலிடத்தில் மீண்டும் அரியணை! டெஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோ ரூட்..!

இந்தத் தொடரில் கலக்கும் பும்ரா – சிராஜ்:


இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி, 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பணிச்சுமை மேலாண்மை காரணமாக பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அதேபோல், முகமது சிராஜ் 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

ALSO READ: புஜாராவுக்கு பிறகு யார்? இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் தடுமாற்றம்..!

பர்மிங்காம் டெஸ்டில் முகமது சிராஜ் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் அடங்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில், சிராஜ் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கிடையில், 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆகாஷ் தீப் சிறப்பான சாதனையை படைத்தார்.

Related Stories
Bangladesh Cricket: இந்தியாவுடன் எதிர்ப்பு! வங்கதேச வீரர்களின் ஸ்பான்சர்ஷிப்பை முடிக்கும் முக்கிய நிறுவனம்!
BCCI Meeting: டெஸ்ட் பயிற்சியாளர் மாற்றமா? VVS லட்சுமணுடன் பிசிசிஐ அதிகாரிகள் ரகசியம் கூட்டம்! என்ன நடந்தது?
IND vs NZ 1st ODI: இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி எப்போது..? எந்த நேரத்தில் நடைபெறும்?
Vijay Hazare Trophy: கடைசி ஓவரில் 6 ரன்கள்.. மெய்டன் ஓவரை வீசி அசத்திய சிஎஸ்கே வீரர்..! குவியும் பாராட்டுகள்!
IPL 2026: முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்-க்கு திரும்ப அழைத்ததா பிசிசிஐ? வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்!
Hardik Pandya: பிசிசிஐ விதிகளை மீறிய ஹர்திக் பாண்ட்யா.. பிரச்சனையை எதிர்கொள்வாரா..?
சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?
இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவிருக்கும் போட்டிகள் - முழு விவரம் இதோ
மும்பையில் தீவிரவாத தாக்குதல்? வெளியான அதிர்ச்சி தகவல்
வட இந்தியாவில் கடும் குளிர்... தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை - முழுமையான வானிலை நிலவரம் இதோ