Mohammed Shami: முகமது ஷமி கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா? பிசிசிஐ சொல்வது என்ன..?

India vs Australia: முகமது ஷமி கடந்த 2025 மார்ச் மாதம் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியின்போது இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பிறகு, காயங்கள் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, முகமது ஷமி உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

Mohammed Shami: முகமது ஷமி கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா? பிசிசிஐ சொல்வது என்ன..?

முகமது ஷமி

Published: 

08 Oct 2025 19:31 PM

 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து இடம் பெறாததை (Ind vs Aus) அடுத்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சர்வதேச வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அதன்படி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami) எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்..? மீண்டும் அணியில் இடம்பெறுவாரா..? என்ற கேள்விகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம் ஷமியை இந்திய அணிக்கு திரும்ப அழைப்பதில் பிசிசிஐ ஆர்வம் காட்டவில்லை. ஷமியின் உள்நாட்டு கிரிக்கெட் செயல்திறன் சமீபத்திய ஆண்டுகளில் மோசமாக உள்ளது, மேலும் அவருக்கு 35 வயதாகிறது, அவர் அணிக்கு திரும்புவது மிகவும் கடினமாக கருதப்படுகிறது.

முகமது ஷமி தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்..?

முகமது ஷமி கடந்த 2025 மார்ச் மாதம் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியின்போது இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பிறகு, காயங்கள் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, ஷமி உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது செயல்திறன் சிறப்பாக இல்லாததால் பிசிசிஐ தேர்வாளர்கள் கவனிக்கவில்லை.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக வலுவான டீம்.. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ இப்படியான சூழ்நிலையில் முகமது ஷமி இந்திய அணிக்கு மீண்டும் வந்து விளையாடுவது கடினம். சமீபத்தில் நடந்த துலீப் டிராபியில் ஷமி சிறப்பாக செயல்படவில்லை. அவருக்கு வயதாகி வருகிறார். மேலும், அவரது வேகம் முன்பு போல் அதே கூர்மையை காட்டவில்லை. ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாட விரும்பினால் முகமது ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ALSO READ: மொத்தம் 8 போட்டிகள்! இந்தியா – ஆஸ்திரேலிய தொடர் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்?

ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் முகமது ஷமி:


முகமது ஷமி பெங்கால் ரஞ்சி டிராபி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு ரஞ்சி டிராபி சீசனில் உத்தரகண்ட் அணிக்கு எதிராக வருகின்ற 2025 அக்டோபர் 15 ஆம் தேதி பெங்கால் தொடங்கவுள்ளது. பெங்கால் தலைமை பயிற்சியாளர் லட்சுமி ரத்தன் சுக்லா கூறுகையில், “நான் 6 அல்லது 7 நாட்களுக்கு முன்பு முகமது ஷமியிடம் பேசினேன். அவர் விளையாட விருப்பம் தெரிவித்தார். எனவே, எங்கள் தரப்பில், அவர் விளையாடுவது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இருப்பினும், பெங்கால் கிரிக்கெட் சங்கம் (CAB) அவரது தேர்வு குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.” என்று தெரிவித்தார். இருப்பினும், ரஞ்சி டிராபிக்கான பெங்கால் அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.