T20 World Cup 2026: இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறுமா? சிக்கலில் பிசிசிஐ!
T20 World Cup 2026 Venues: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் நாளில், அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி மட்டும் 3 போட்டிகள் நடைபெறும். இந்த நாளில் பாகிஸ்தான் நெதர்லாந்தையும், இந்தியா அமெரிக்காயும், வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசத்தை எதிர்கொள்ளும். தற்போது, வங்கதேசம் தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வங்கதேசம் தங்கள் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் கோரியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026
டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் இந்தியாவின் (India) 5 நகரங்களிலும், இலங்கையில் 3 நகரங்களிலும் நடைபெறும். இதுபோன்ற சூழ்நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையை நடத்தும் நாடு உண்மையில் எது? வங்கதேச கிரிக்கெட் அணியின் கோரிக்கையால் 2026 டி20 உலகக் கோப்பை ஹைப்ரிட் மாதிரியில் நடத்தப்படுமா? பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்படுமா? உள்ளிட்ட எல்லா கேள்விகளுக்கான பதில்களையும் தெரிந்து கொள்வோம்.
2026 டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது..?
2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும். இந்த உலகப் போட்டியின் இறுதிப் போட்டியானது 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து 2026 டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன. அனைத்துப் போட்டிகளும் மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடைபெறும். இந்த முறை மொத்தம் 20 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும் என்பதால், இது நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையின் முதல் நாளில், அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி மட்டும் 3 போட்டிகள் நடைபெறும். இந்த நாளில் பாகிஸ்தான் நெதர்லாந்தையும், இந்தியா அமெரிக்காயும், வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசத்தை எதிர்கொள்ளும். தற்போது, வங்கதேசம் தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வங்கதேசம் தங்கள் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் கோரியுள்ளது. இதற்கு, ஐசிசியிடம் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகள்:
- குரூப் A- இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா
- குரூப் B- ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன்
- குரூப் C- இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி
- குரூப் D- நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
இலங்கை மண்ணில் மட்டுமே பாகிஸ்தான் போட்டிகளா..?
பலர் பாகிஸ்தான் மட்டுமே இலங்கையில் தங்கள் போட்டிகளை விளையாடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே போட்டி, இலங்கை vs ஓமன் போட்டி, அமெரிக்கா vs நெதர்லாந்து போட்டி, அயர்லாந்து vs ஓமன் போட்டி, இங்கிலாந்து vs வங்கதேசம் போட்டி, இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, ஆஸ்திரேலியா vs இலங்கை போட்டி, அயர்லாந்து vs ஜிம்பாப்வே போட்டி, பாகிஸ்தான் vs நமீபியா போட்டி, இலங்கை vs ஜிம்பாப்வே போட்டி மற்றும் ஆஸ்திரேலியா vs ஓமன் போட்டி ஆகியவை இலங்கையில் நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்தும் லீக் ஸ்டேஜ் போட்டிகளாக திட்டமிடப்பட்டுள்ளன. இதன் பிறகு, சூப்பர்-8 இல் சில போட்டிகள் இலங்கையில் நடைபெறும்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் விலகுகிறதா..? என்ன நடக்கும்..?
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எங்கு நடைபெறும்..?
பாகிஸ்தான் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியானது இலங்கையின் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்றால், இரண்டு அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும். 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இலங்கையில் நடைபெறும்.