IND W vs AUS W: இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
IND W vs AUS W Semi Final: ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர்
2025 மகளிர் உலகக் கோப்பையின் (ICC Womens World Cup) அரையிறுதிப் போட்டிகள் நாளை அதாவது 2025 அக்டோபர் 28ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் (IND W vs AUS W) 2வது அரையிறுதி போட்டியில் நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதுகின்றன. தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. ஆனால் இந்த முறை, இந்திய வீராங்கனைகள் களத்தில் வரலாற்றை மாற்றியமைக்க முயன்று 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இடம் பிடிக்க கடினமாக முயற்சி செய்வார்கள். இந்தநிலையில், இந்த போட்டி குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 7 மாத கர்ப்பம்! 145 கிலோ பளு தூக்கி சாதனை.. வெண்கலம் வென்ற டெல்லி பெண் கான்ஸ்டபிள்!
இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் சாதனை
இரு அணிகளும் 60 மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) நேருக்கு நேர் மோதியுள்ளன.
- ஆஸ்திரேலியா வெற்றி: 49 போட்டிகள்
- இந்தியா வெற்றி: 11 போட்டிகள்
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
உலகக் கோப்பையில் எந்த அணி அதிக ஆதிக்கம்..?
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றிலும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, அவற்றில்
- இந்தியா வெற்றி: 3 போட்டிகள்
- ஆஸ்திரேலியா வெற்றி: 11 போட்டிகள்
போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும்.
ALSO READ: காயத்தால் விலகிய பிரதிகா ராவல்.. ஸ்மிருதியுடன் தொடக்கம் தரப்போவது யார்..?
போட்டியை எங்கே பார்ப்பது?
2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். கூடுதலாக, போட்டியின் ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்தில் இலவசமாக பார்வையாளர்கள் காணலாம்.