Ravindra Jadeja: அவரை மிஸ் செய்யாமல் எப்படி..? அஸ்வின் குறித்து ஜடேஜா உணர்ச்சிவசம்..!
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. நேற்று அதாவது 2025 செப்டம்பர் 4ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தனது நீண்டகால சக வீரரும், நண்பருமான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) பற்றிப் பேசிய ஜடேஜா, அஸ்வினின் ஓய்வு குறித்து பேசியபோது ஒவ்வொரு வீரரும் ஒரு நாள் ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவித்தார். ரவீந்திரா ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் இந்தியா தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியடையாமல் வெற்றியை மட்டுமே ருசித்தது. இந்தநிலையில், கடந்த 2024ம் ஆண்டு நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் ஜடேஜா – அஸ்வின் பார்ட்னர்ஷிப்புக்கும் முடிவுக்கு வந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. நேற்று அதாவது 2025 செப்டம்பர் 4ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்த ஜடேஜா பந்திலும் அற்புதமாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா தனது நீண்டகால கூட்டாளியான அஸ்வினையும் நினைவு கூர்ந்தார்.
ALSO READ: தடையாக வரும் மழை.. உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..?
அஸ்வின் குறித்து பேசிய ஜடேஜா:
Ravindra Jadeja has truly been bossing it 💯#IndianCricket #INDvWI #CricketTwitter pic.twitter.com/natlLdMhaM
— Cricbuzz (@cricbuzz) October 4, 2025
ஜடேஜாவிடம் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ”நிச்சயமாக, நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம். அஸ்வின் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்களித்துள்ளார். அஸ்வின் இல்லாமல் இந்திய அணி பல போட்டிகளில் வென்றிருக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவில் டெஸ்ட் விளையாடுவதை நினைத்துப் பார்க்கும்போது, அஸ்வின் இல்லாதது விசித்திரமாக இருக்கிறது. அஸ்வின் இப்போது பந்து வீசுவார், எங்கு இருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் இனி அணியில் இல்லை என்பதை நான் உணர நேரம் எடுக்கிறது” என்றார்.
இளம் வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை பாராட்டிய ஜடேஜா, “எதிர்காலத்தில், நான் அணியில் இல்லாதபோது, வேறு யாராவது என் இடத்தைப் பிடிப்பார்கள். இது விளையாட்டின் ஒரு பகுதி, மாற்றமும் அவசியம். நான் முன்பு போலவே விளையாடுகிறேன். ஆனால் யாராவது என்னிடம் ஆலோசனை கேட்கும்போதோ அல்லது உத்தி பற்றி கேட்கும்போதோ, நான் நிச்சயமாக என் கருத்தைத் தெரிவிப்பேன்” என்று கூறினார்.
கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 7 அரைசதங்களை அடித்துள்ளார். தனது ஆல்ரவுண்ட் செயல்திறன் குறித்துப் பேசுகையில், “அணிக்கு பங்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என் மனநிலையை மாற்றி, உடற்தகுதியில் கவனம் செலுத்தியுள்ளேன். கடவுளின் அருளால், காயங்களைத் தவிர்த்துவிட்டேன், இப்போது நான் உடற்தகுதியுடனும் வலிமையுடனும் உணர்கிறேன். அதன் விளைவுகள் மைதானத்தில் தெளிவாக செயல்திறன் தெரிகிறது” என்றார்.
ALSO READ: உலகக் கோப்பைக்கு முன்பு கோலி – ரோஹித் ஓய்வா? அதிர்ச்சி பதிலளித்த அஜித் அகர்கர்!
அஸ்வின் தனது வாழ்க்கையில் 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கிடையில், ஜடேஜா இந்திய அணிக்காக இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 334 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.