Shreyas Iyer Injury: 50 சதவீதமாக குறைந்த ஆக்ஸிஜன் அளவு.. ஷ்ரேயாஸை எடுக்க தயங்கும் பிசிசிஐ.. இந்திய அணியில் இடமில்லையா?

IND vs SA ODI Series: அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த ஒருநாள் தொடருக்கான அணியை விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் இடம் கை பேட்ஸ்மேனான திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கலாம்.

Shreyas Iyer Injury: 50 சதவீதமாக குறைந்த ஆக்ஸிஜன் அளவு.. ஷ்ரேயாஸை எடுக்க தயங்கும் பிசிசிஐ.. இந்திய அணியில் இடமில்லையா?

ஷ்ரேயாஸ் ஐயர் காயம்

Published: 

11 Nov 2025 15:52 PM

 IST

இந்திய அணியின் (Indian Cricket Team) துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) காயத்தின் காரணமாக ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இந்தியா திரும்பியுள்ளார். இருப்பினும், காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சாத்தியமில்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்திய அணியில் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து இந்திய தேர்வுக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!

என்ன நடந்தது..?


2025 அக்டோபர் மாதம் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயர் கடினமான கேட்சை பிடித்தபோது, நெஞ்சு பகுதி தரையில் பலமாக மோதி மண்ணீரலில் காயம் ஏற்பட்டது, இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு, ஒரு மாதம் கடந்த பின்னரும் இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை, அவர் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டிய சூழலை தந்துள்ளது.

இதற்கிடையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து ஒரு முக்கிய அறிக்கை வெளிவந்துள்ளது. ஐயரின் உடல்நிலை ஆரம்பத்தில் மிகவும் மோசமாக இருந்ததாகவும், சம்பவத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில், அவரது ஆக்ஸிஜன் அளவு 50 ஆகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதிக்கு திரும்ப சிறிது நாட்கள் தேவைப்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அடிலெய்டில் அரைசதம் அடித்த போதிலும், அவரை மீண்டும் அணியில் சேர்க்க பிசிசிஐ தயங்குகிறது.

ALSO READ: விரைவில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பு!

யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த ஒருநாள் தொடருக்கான அணியை விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கலாம். இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 4வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். கடந்த 2025 நவம்பர் 5ம் தேதி, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது மற்றும் 3வது போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், ரியான் பராக் 4வது இடத்திற்கு சரியான தேர்வாக இருப்பார். கடந்த 2025 அக்டோபர் மாதம் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரியான் பராக் சிறப்பான பேட்டிங் செய்து அசத்தினார்.