IND vs SA 2nd ODI: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் மழையால் ரத்தா? வானிலை எப்படி?

IND vs SA 2nd ODI Weather Report: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ஷாஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும். இங்கு போட்டி நடைபெறும் நாளில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

IND vs SA 2nd ODI: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் மழையால் ரத்தா? வானிலை எப்படி?

இந்தியா - தென்னாப்பிரிக்கா

Published: 

03 Dec 2025 08:05 AM

 IST

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India vs South Africa) அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நடைபெறும் ராய்ப்பூரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா (Indian Cricket Team) மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதா?  ராய்ப்பூரில் வானிலை எப்படி உள்ளது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். மேலும், விராட் கோலி தனது 83வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.

ALSO READ: தேர்வாளருடன் பேசிய கோலி.. தனியாக உட்கார்ந்திருந்த கம்பீர்.. இந்திய அணிக்குள் சிக்கலா?

2025 டிசம்பர் 3 அன்று ராய்ப்பூரில் வானிலை எப்படி இருக்கும்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ஷாஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும். இங்கு போட்டி நடைபெறும் நாளில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அதன்படி, ராய்ப்பூரில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் போட்டிக்கு இடையூறு ஏற்படாது. மழை பெய்தாலும், விரைவில் மீண்டும் தொடங்கும்.

மழை இல்லையென்றாலும் ஷாஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் மாலையில் பலத்த பனி பெய்ய வாய்ப்புள்ளது. இது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக அமையும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டியை எப்போது, ​​எங்கே நேரடியாகப் பார்ப்பது?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி  வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். நேரடி ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்திலும் கிடைக்கும்.

இந்திய அணி

ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, விராட் கோலி , யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ்

ALSO READ: ரிஷப் பண்டிற்கு ராய்ப்பூரில் வாய்ப்பு கிடைக்குமா? இந்திய பிளேயின் 11 எப்படி?

தென்னாப்பிரிக்கா அணி

ஐடன் மார்க்ரம், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரூயிஸ், ரூபின் ஹெர்மன், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நான்ட்ரே பர்கர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், ஓத்னியேல் பார்ட்மேன், ப்ரீனெல்லான்சி.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!