IND vs SA 1st Test: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்.. குறுக்கே புகுந்து ஆட்டத்தை கெடுக்குமா மழை?
IND vs SA 1st Test Weather Report: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மழை பெய்யும் என்று எந்த முன்னறிவிப்பும் இல்லை. பகல்நேர வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியம்
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் (India vs South Africa Test Series) இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அதாவது 2025 நவம்பர் 14ம் தேதி ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தாவின் கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு, ஈடன் கார்டனில் டெஸ்ட் போட்டியை காணவுள்ளனர். இந்தியா கடைசியாக 2019ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக இந்த ஸ்டேடியத்தில் விளையாடியது. இதன்பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) 18 டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இந்தநிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் வானிலை எப்படி இருக்கும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கடினமாக காட்சியளித்த பிட்ச்.. ஈடன் கார்டனில் கில் அதிருப்தி.. நேரில் ஆய்வு செய்த கங்குலி..!
கொல்கத்தாவில் இந்திய அணியின் டெஸ்ட் சாதனை எப்படி இருக்கிறது?
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1934ம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி மொத்தம் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 13 போட்டிகளில் வெற்றியையும், 9 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது. மேலும், இருபது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. அதேநேரத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்திய அணி ஈடன் கார்டன்ஸில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 8 போட்டிகளில் வெற்றியையும், ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. மேலும், 3 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா கொல்கத்தா டெஸ்ட் முதல் நாள் வானிலை அறிக்கை
All set for the series opener at an iconic venue 🙌
🏟️ Eden Gardens
⏰ 9:30 AM IST
💻 https://t.co/hIL8VeeCtI
📱 Official BCCI App #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/S8ZDxnoLej— BCCI (@BCCI) November 13, 2025
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் மழை பெய்யும் என்று எந்த முன்னறிவிப்பும் இல்லை. AccuWeather இன் படி, மழை பெய்ய வாய்ப்பில்லை. பகல்நேர வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் ஒவ்வொரு அமர்வும் சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடிவடையும்.
ALSO READ: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எப்போது? இலவசமாக எங்கு பார்க்கலாம்..?
இரு அணிகளின் முழு விவரம்:
இந்திய அணி:
சாய் சுதர்ஷன், சுப்மன் கில், தேவ்தத் படிக்கல், கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா , குல்தீப் யாதவ்.
தென்னாப்பிரிக்க அணி:
டெவால்ட் ப்ரூவிஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜுபியூர் ஹம்சா, ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், செனுரன் முத்துசாமி, வில்லெம் முல்டர், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர்), ரியான் ரிக்கெவ், கேகிஸ்பாவ், கேகிஸ்போடா சைமன் ஹார்மர்.