BAN vs PAK: ஹெல்மெட்டை தூங்கி எறிந்த விவகாரம்.. சல்மான் ஆகாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
Salman Agha Controversial Run Out: ஐசிசி போட்டி நடுவர் நியாமூர் ரஷீத், சல்மான் அலி ஆகாவை கண்டித்தது மட்டுமின்றி, ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகாவின் செயல்கள் கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதை நிரூபித்தது. சல்மான் ஆகா இதற்கு முன்பு ஐசிசி விதிகளை மீறவில்லை.

சல்மான் அலி ஆகா
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு (PAK vs BAN) இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சல்மான் அலி ஆகா வித்தியாசமான முறையில் ரன் அவுட் ஆனதை அடுத்து செய்திகளில் இடம்பிடித்துள்ளது. சல்மான் அலி ஆகா ரன் அவுட் செய்யப்பட்ட விதம் குறித்து கிரிக்கெட் உலகில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. வங்கதேச வீரர் சல்மான் அலி ஆகாவை அவுட் செய்தது சரிதான் என்றும், இந்த செயல் ஆட்டத்தின் ஸ்போர்ட்மேன்ஷிப் எதிரானது என்றும் கூறினர். இந்தப் பின்னணியில், சல்மான் அலி ஆகா மீது ஐ.சி.சி (ICC) நடவடிக்கை எடுத்துள்ளது. சல்மான் அலி ஆகா மூன்றாவது நடுவரால் அவுட் செய்யப்பட்ட பிறகு, அவர் வங்கதேச வீரர்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆகா தனது ஹெல்மெட் மற்றும் கையுறைகளை எல்லைக்கோடு அருகே வீசினார். இதன் காரணமாக, சல்மான் ஆகா மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகாவின் கணக்கில் ஒரு தகுதி இழப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
ALSO READ: வங்கதேச வீரர்கள் செய்த செயல்.. ஹெல்மெட்டை எறிந்த சல்மான் ஆகா.. வைரலாகும் வீடியோ!
சல்மான் ஆகாவுக்கு ஐ.சி.சி தண்டனை:
ஐசிசி போட்டி நடுவர் நியாமூர் ரஷீத், சல்மான் அலி ஆகாவை கண்டித்தது மட்டுமின்றி, ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகாவின் செயல்கள் கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதை நிரூபித்தது. சல்மான் ஆகா இதற்கு முன்பு ஐசிசி விதிகளை மீறவில்லை. எனவே, ஐசிசி நடத்தை விதிகளின்படி, சல்மான் ஆகா நிலை 1 (பிரிவு 2.2) மீறலை மட்டுமே செய்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த விதி கையுறைகள், தலைக்கவசங்கள் அல்லது பேட் போன்ற கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துவதாகும்.
சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட்டான பிறகு சல்மான் ஆகா மைதானத்தை விட்டு வெளியேறும்போது கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது. எனவே, அவருக்கு அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.
நியாமூர் ரஷூத் பேட்டி:
டெய்லி ஸ்டார் வங்கதேச பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நியாமூர் ரஷீத், சல்மான் ஆகாவுக்கும் வங்கதேச வீரர்களுக்கும் இடையிலான வாக்குவாதம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இது தவறான புரிதலால் ஏற்பட்ட சம்பவம் ஆகும். இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ALSO READ: அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியில் நடந்தது என்ன?
வங்கதேசத்தின் ஷெர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் 128 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 1-1 என சமன் செய்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.