India vs Pakistan: இந்தியாவிற்கு எதிரான தோல்வி..! மீண்டும் நடுவரை கைகாட்டும் பாகிஸ்தான்.. ஐசிசியிடம் புகார்!

IND vs PAK Asia Cup 2025: பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் இந்திய அணிக்கு எதிராக 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டத்தைத் தொடங்கினார். இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா வீசிய 3வது ஓவரில் ஃபகர் ஜமான் பேட்டில் எட்ஜ் பட்டு பந்தானது இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் தஞ்சம் புகுந்தது.

India vs Pakistan: இந்தியாவிற்கு எதிரான தோல்வி..! மீண்டும் நடுவரை கைகாட்டும் பாகிஸ்தான்.. ஐசிசியிடம் புகார்!

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

23 Sep 2025 08:30 AM

 IST

2025 ஆசியக் கோப்பையின் (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India – Pakistan) அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி இப்போது ஒரு புதிய சர்ச்சையைத் தூண்டியுள்ளது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமானின் அவுட் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ( PCB ) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது. 3வது நடுவரின் முடிவு தவறானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி, அம்பயரின் முடிவு குறித்தும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு புதிய பரபரப்பு:


பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் இந்திய அணிக்கு எதிராக 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டத்தைத் தொடங்கினார். இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா வீசிய 3வது ஓவரில் ஃபகர் ஜமான் பேட்டில் எட்ஜ் பட்டு பந்தானது இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் தஞ்சம் புகுந்தது. அப்போது, கள நடுவர் உடனடியாக ஜமானை அவுட் என்று அறிவிக்கும் அளவுக்கு முடிவு தெளிவாக இல்லாததால், 3வது நடுவர் ருசிரா பாலியகுருகேவிடம் குறிப்பிடப்பட்டது. 3வது நடுவர் பல்வேறு கோணங்களை மதிப்பாய்வு செய்த பிறகு , ஜமானை அவுட் என்று அறிவித்தார் . இருப்பினும், பாகிஸ்தான் இந்த முடிவில் அதிருப்தி அடைந்தது.  டிவி நடுவர் ருசிரா பாலியகுருகே ஃபகார் ஜமானை அவுட் என்று தவறாக அறிவித்ததாக நினைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்தது.

ALSO READ: இணையத்தில் விவாதத்தை கிளப்பும் ஃபகர் ஜமான் அவுட்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

இந்த விக்கெட்டைத் தொடர்ந்து , ரசிகர்களின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் விவாதங்களை கிளப்பியது. சிலர் இது ஒரு நியாயமான முடிவு என்று கூறினாலும், ஒரு சிலர் 3வது அம்பயர் தவறான முடிவு என கூறினர். இருப்பினும், மூன்றாவது நடுவரின் முடிவு இறுதியானதாகக் கருதப்படுகிறது, மேலும் ஒரு அணி நடுவரின் முடிவைப் பற்றி ஐ.சி.சி.யிடம் புகார் செய்வது அரிது . இருப்பினும், இந்த தோல்வியை பாகிஸ்தான் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது. முன்னதாக குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் அணி போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மீதும் புகார் அளித்தனர். ஆனால் ஐ.சி.சி அதை நிராகரித்தது.

ALSO READ: பாகிஸ்தான் செய்தது பிடிக்கல.. பேட்டிங்கால் பதிலடி! அபிஷேக் சர்மா ஓபன் டாக்..!

பாகிஸ்தான் கேப்டன் பத்திரிகையாளர் சந்திப்பில் என்ன சொன்னார் ?

போட்டிக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவும் நடுவரின் முடிவைக் கேள்வி எழுப்பினார். அதில், “நடுவர்கள் தவறு செய்யலாம் . ஆனால் பந்து கீப்பரிடம் தரையில் பட்டபிறகே சென்றதாக உணர்ந்தேன். நான் தவறாக இருக்கலாம். ஃபக்கர் பேட்டிங் செய்த விதம், பவர்பிளேயில் அவர் பேட்டிங் செய்திருந்தால் , நாங்கள் 190 ரன்கள் எடுத்திருக்கலாம். நான் தவறாக இருக்கலாம், ஆனால் நடுவர்களும் தவறான முடிவை அறிவிக்கலாம். ஆனால் முடிவில் நடுவரின் முடிவே இறுதியானது.” என்றார்.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை