IND vs NZ T20: வெளியேறிய வாஷிங்டன்.. உள்ளே வந்த ஷ்ரேயாஸ், பிஷ்னோய்! இந்திய அணியில் மாற்றம்!
Indian Cricket Team: கடந்த 2026 ஜனவரி 11ம் தேதி வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது பந்து வீசும்போது ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு திடீரென கீழ் விலா எலும்புகளில் வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஸ்கேன்களில் இடுப்பில் பக்கவாட்டு வலி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ரவி பிஷ்னோய் - ஷ்ரேயாஸ் ஐயர்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் (Indian Cricket Team) பிசிசிஐ சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் டி20 அணிக்குத் திரும்பியுள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar), முன்னதாக ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் உருவானது. இதனால், பிசிசிஐ அதிரடியாக மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
ALSO READ: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர்.. வெளியான அட்டவணை விவரம்!
யாருக்கு பதிலாக யார்..?
🚨 News 🚨
Shreyas Iyer & Ravi Bishnoi added to #TeamIndia T20I squad; Washington Sundar ruled out.
Details ▶️ https://t.co/cNWHX9TOVk#INDvNZ | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) January 16, 2026
கடந்த 2026 ஜனவரி 11ம் தேதி வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது பந்து வீசும்போது ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு திடீரென கீழ் விலா எலும்புகளில் வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஸ்கேன்களில் இடுப்பில் பக்கவாட்டு வலி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவக் குழு அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், காயம் காரணமாக திலக் வர்மா ஏற்கனவே முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். காயமடைந்த திலக் வர்மாவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் மூன்று டி20 போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருப்பார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணிக்குத் திரும்புகிறார். அவர் கடைசியாக டிசம்பர் 2023 இல் ஒரு டி20 போட்டியில் விளையாடினார். இதற்கிடையில், ரவி பிஷ்னோய் பிப்ரவரி 2025 முதல் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் விளையாடவில்லை. எனவே, இந்தத் தொடர் இரு வீரர்களுக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும்.
ALSO READ: நியூசிலாந்துக்கு எதிராக முக்கிய சாதனை.. படைக்க காத்திருக்கும் ரோஹித் – கோலி!
டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர் (முதல் மூன்று டி20), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங். இஷான் கிஷன், ரவி பிஷ்னோய்.
இந்தியா-நியூசிலாந்து டி20 தொடர் வருகின்ற 2026 ஜனவரி 21 முதல் 2026 ஜனவரி 31 வரை நடைபெறும்.