IND vs NZ 3rd T20: இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 போட்டி மழையால் பாதிக்கப்படுமா? வானிலை நிலவரம் இதோ!
IND vs NZ 3rd T20 Weather Report: இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 போட்டி இன்று அதாவது 2025 ஜனவரி 25ம் தேதி மாலை 7 மணிக்கு குவஹாத்தியில் தொடங்கும். இன்றைய போட்டி நாளில் நகரத்திற்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை.

இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 வானிலை
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றும். இந்த போட்டி குவஹாத்தியில் உள்ள பர்சபரா ஏசிஏ ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஸ்டேடியத்தில் இந்தியா ஒரு டி20 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டியின்போது குவஹாத்தியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியில் காயமடைந்த அக்சர் படேல், குவஹாத்தியில் விளையாடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. இரண்டாவது போட்டியில் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டார். அதேநேரத்தில், ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டார். அதன்படி, மூன்றாவது டி20 போட்டியிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். முதல் தோல்விக்குப் பிறகு இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மூன்று மாற்றங்களைச் செய்தது. இருப்பினும், மோசமாக தோல்வியடைந்தது. இப்போது, குவஹாத்தியில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் தொடரை இழக்கும்.
ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!
பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் டி20 சாதனைகள்:
இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாடம் ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2022ம் ஆண்டு இந்தியா தென்னாப்பிரிக்காவை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
குவஹாத்தியில் வானிலை எப்படி இருக்கும்?
இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 போட்டி இன்று அதாவது 2025 ஜனவரி 25ம் தேதி மாலை 7 மணிக்கு குவஹாத்தியில் தொடங்கும். இன்றைய போட்டி நாளில் நகரத்திற்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை. காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மழை பெய்ய 5 முதல் 10 சதவீதம் வரை வாய்ப்பு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல், மாலை 6 மணி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு வெப்பநிலை சுமார் 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், இரவு 9 மணிக்குள் 17 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: இது நடந்தால் உலகக் கோப்பையில் இருந்து விலகுவோம்.. மொஹ்சின் நக்வி அதிர்ச்சி தகவல்!
பர்சபாரா ஸ்டேடியத்தின் பிட்ச் அறிக்கை:
ஏசிஏ மைதானத்தில் உள்ள பிட்ச் பொதுவாக தட்டையானது என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு நிறைய உதவியாக இருக்கும். இது சிவப்பு களிமண் ஆடுகளம். மாலை நேரங்களில் பனி பெய்யும், எனவே டாஸ் வெல்வது இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். பந்து வீச்சாளர்கள் இங்கு ஸ்விங் செய்ய வாய்ப்புள்ளது. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசுவதைத் தேர்ந்தெடுப்பார். அதிக ஸ்கோரிங் கொண்ட போட்டி இங்கே எதிர்பார்க்கப்படுகிறது.