IND vs NZ 3rd ODI: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தூரில் இந்தியா சாதனை எப்படி?

Holkar Stadium ODI Records: ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து 212 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். 

IND vs NZ 3rd ODI: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தூரில் இந்தியா சாதனை எப்படி?

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

17 Jan 2026 14:53 PM

 IST

இந்தியா vs நியூசிலாந்து தொடரின் (IND vs NZ 3rd ODI) மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும். விராட் கோலி (Virat Kohli) சிறந்த ஃபார்மில் இருந்தாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். எனவே, போட்டியில் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டு இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த ரோஹித் சர்மா மீதும் எதிர்பார்ப்புகள் அதிகம். எனவே, இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கும்.

இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியம்:

இந்தூரின் ஹோல்கர் ஸ்டேடியத்தில் முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு 2006 இல் நடைபெற்றது, அப்போது இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. அதன் பின்னர், இந்தூர் 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை நடத்தியுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியும் அடங்கும்.

ALSO READ: வெளியேறிய வாஷிங்டன்.. உள்ளே வந்த ஷ்ரேயாஸ், பிஷ்னோய்! இந்திய அணியில் மாற்றம்!

இந்தூரில் இந்திய அணியின் ஒருநாள் போட்டி சாதனை எப்படி இருக்கிறது?

ஹோல்கர் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், இந்திய அணி இங்கு 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி இந்தூரில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட தோல்வியடைந்ததில்லை. இங்கு  கடைசியாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ஒருநாள் போட்டியில் விளையாடியபோது இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தபோட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினர்.

ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து 212 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

  • மொத்த போட்டிகள் – 7
  • இந்தியா வென்றது – 7
  • இந்தியா தோல்வி – 0

ஹோல்கர் ஸ்டேடியத்தில் அதிக ஒருநாள் ரன்கள்

  • வீரேந்தர் சேவாக் – 220
  • சுப்மன் கில் – 216
  • ரோஹித் சர்மா – 205

ஹோல்கர் ஸ்டேடியத்தில் அதிக ஒருநாள் விக்கெட்டுகள்

  • எஸ். ஸ்ரீசாந்த் – 6
  • ரவீந்திர ஜடேஜா – 6
  • யுவராஜ் சிங் – 5
  • குல்தீப் யாதவ் – 5

ALSO READ: நியூசிலாந்துக்கு எதிராக முக்கிய சாதனை.. படைக்க காத்திருக்கும் ரோஹித் – கோலி!

இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் 2026 ஜனவரி 11ம் தேதி தொடங்கியது. வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி 2026 ஜனவரி 18ம் தேதி இந்தூரில் நடைபெறும்.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!