IND vs ENG Test: 2021ல் முழுக்க முழுக்க அனுபவம்.. 2025ல் முற்றிலும் இளம் படை.. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி விவரம்!

Indian Cricket Team Squad: 2021 மற்றும் 2025 இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயண இந்திய அணிகளின் ஒப்பீடு இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. 2021ல் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணி இருந்தபோது, 2025ல் இளம் வீரர்களைக் கொண்ட அணி களமிறங்குகிறது. சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் மற்றும் 2025 தொடரின் எதிர்பார்ப்புகள் இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

IND vs ENG Test: 2021ல் முழுக்க முழுக்க அனுபவம்.. 2025ல் முற்றிலும் இளம் படை.. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி விவரம்!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

15 Jun 2025 19:12 PM

2025 ஜூன் 20ம் தேதி முதல் லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி (IND vs ENG Test Series 2025) விளையாடவுள்ளது. பலம் மிக்க இங்கிலாந்து அணிக்கு எதிராக பிசிசிஐ தேர்வுக்குழு முற்றிலும் இளம் இந்திய அணியை தேர்வு செய்துள்ளது. இந்த இளம் இந்திய அணிக்கு சுப்மன் கில் (Shubman Gill) கேப்டனாகவும், ரிஷப் பண்ட் (Rishabh Pant) துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், 2021ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கும், 2025ல் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணிக்கு உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்வோம்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2021ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், சேதேஷர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி என்ற அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த அணி முழுக்க முழுக்க அனுபவம் நிறைந்த அணிகளால் உருவாக்கப்பட்டது. இந்த 7 வீரர்களும் 50 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதிலும், இஷாந்த் சர்மா 102 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

2021ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, புஜாரா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், ரிஷப் பண்ட், விருத்திமான் சிங், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்

2025ம் ஆண்டிற்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 வயதான சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கேப்டனான சுப்மன் கில்லுக்கே 32 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளது. அதன்படி, அஸ்வின், கோலி, ரோஹித் ஓய்வுக்கு பிறகு, இளம் இந்திய அணி அனுபவத்தில் மிகவும் பலவீனமான அணியாக பார்க்கப்படுகிறது. இளம் இந்திய அணியில் 2 வீரர்கள் மட்டுமே 50க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதேநேரத்தில், 3 வீரர்கள் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது.

2021 சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு எப்படி அமைந்தது..?

2021ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. இதன்பின்னர், கொரோனா பரவல் காரணமாக இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, 2022ம் ஆண்டு நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. அனுபவம் வாய்ந்த அணி இருந்தபோதிலும், இந்தியாவால் இந்த தொடரை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை.

2025ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.