India Cricket Schedule July 2025: 4 டெஸ்ட், 4 டி20, 3 ஒருநாள் போட்டிகள்.. ஜூலை மாதத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!

England tour of India 2025: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் 2025 ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளன. ஆண்கள் அணி டெஸ்ட் தொடரில் களமிறங்க, பெண்கள் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்தியா vs இங்கிலாந்து போட்டிகளின் முழு அட்டவணை, தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

India Cricket Schedule July 2025: 4 டெஸ்ட், 4 டி20, 3 ஒருநாள் போட்டிகள்.. ஜூலை மாதத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!

சுப்மன் கில் - ஸ்மிருதி மந்தனா

Published: 

30 Jun 2025 16:38 PM

 IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு, சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய ஆண்கள் அணி (Indian Mens Cricket Team) வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை, நாளை அதாவது 2025 ஜூலை 1ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்தநிலையில், 2025 ஜூலை மாதத்தில் இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் முழுமையான அட்டவணை, தேதி, நேரம் மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்பிறகு, இந்திய பெண்கள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அட்டவணை:

இந்தியா vs இங்கிலாந்து 2வது டி20 போட்டி

  • தேதி: 2025 ஜூலை 1
  • இடம்: சீட் யுனிக் ஸ்டேடியம்
  • நேரம்: இரவு 11:00 மணி

இந்தியா vs இங்கிலாந்து 3வது டி20

  • தேதி: 2025 ஜூலை 4
  • இடம்: ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியம்
  • நேரம்: இரவு 11:05 மணி

இந்தியா vs இங்கிலாந்து 4வது டி20

  • தேதி: 2025 ஜூலை 9
  • இடம்: ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் ஸ்டேடியம்
  • நேரம்: இரவு 11:00 மணி

இந்தியா vs இங்கிலாந்து 5வது டி20ஐ

  • தேதி: 2025 ஜூலை 12
  • இடம்: எட்ஜ்பாஸ்டன்
  • நேரம்: நேரம்: இரவு 11:05 மணி

இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

  • தேதி: 2025 ஜூலை 16
  • இடம்: ஏஜியாஸ் பவுல்
  • நேரம்: மாலை 5:30 மணி

இந்தியா vs இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி

  • தேதி: 2025 ஜூலை 19
  • இடம்: லார்ட்ஸ்
  • நேரம்: பிற்பகல் 3:30 மணி

இந்தியா vs இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி

  • தேதி: 2025 ஜூலை 22
  • இடம்: ரிவர்சைடு ஸ்டேடியம்
  • நேரம்: மாலை 5:30 மணி

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் அட்டவணை:


இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட்

  • தேதி: 2025 ஜூலை 2 முதல் 6 வரை
  • இடம்: எட்ஜ்பாஸ்டன்
  • நேரம்: பிற்பகல் 3:30 மணி

இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்

  • தேதி: 2025 ஜூலை 10 முதல் 14 வரை
  • இடம்: லார்ட்ஸ்
  • நேரம்: பிற்பகல் 3:30 மணி

இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்

  • தேதி: 2025 ஜூலை 23 முதல் 27 வரை
  • இடம்: ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் ஸ்டேடியம்
  • நேரம்: பிற்பகல் 3:30 மணி

இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட்

  • தேதி: 2025 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை
  • இடம்: ஓவல்
  • நேரம்: பிற்பகல் 3:30 மணி

இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..