Rishabh Pant’s Century: இந்திய அணிக்காக அதிக சதம்! தோனியின் சாதனை முறியடிப்பு.. டெஸ்ட் போட்டியில் கலக்கும் ரிஷப் பண்ட்!

IND vs ENG 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. ஜெய்ஸ்வால், கில் மற்றும் பண்ட் ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். குறிப்பாக, பண்ட் தனது 7வது டெஸ்ட் சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இது இந்திய அணியின் அபார ஆட்டத்தைக் காட்டுகிறது.

Rishabh Pants Century: இந்திய அணிக்காக அதிக சதம்! தோனியின் சாதனை முறியடிப்பு.. டெஸ்ட் போட்டியில் கலக்கும் ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்

Published: 

21 Jun 2025 18:41 PM

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் (IND vs ENG 1st Test) முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது. இதுவரை, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) சதம் அடித்துள்ளனர். இந்த போட்டியில் இதுவரை 3 இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர். இதில், சிறப்பு என்னவென்றால் ரிஷப் பண்ட் சதம் அடித்ததன்மூலம், இந்திய வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இது ரிஷப் பண்டின் 7வது டெஸ்ட் சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி சாதனையை முறியடித்த பண்ட்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் அற்புதமான சதம் அடித்தார். இந்த சதத்தின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த எம்.எஸ். தோனியின் சத சாதனையை பண்ட் முறியடித்துள்ளார். ரிஷப் பண்டுக்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி படைத்திருந்தார். தற்போது இந்த சாதனை ரிஷப் பண்ட் தன்வசமாக்கியுள்ளார்.

இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் 5வது இடத்திற்கு வந்துள்ளார். இந்த பட்டியலில் குமார் சங்கக்காரா, ஏபி டிவில்லியர்ஸ், மேட் பிரையர் மற்றும் பிஜே வாட்லிங் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இது இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் அடிக்கும் மூன்றாவது சதமாகும். இங்கிலாந்தில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பண்ட் பெற்றுள்ளார்.

தோனியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை:

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 144 இன்னிங்ஸ்களில் 38.09 சராசரியுடன் 33 அரைசதங்கள் மற்றும் 6 சதங்கள் உதவியுடன் 4876 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 78 சிக்ஸர்களைய்யும், 544 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனி டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்களை செய்துள்ளார்.

ரிஷப் பண்டின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை:

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ரிஷப் பண்ட், 44 டெஸ்ட் போட்டிகளில் 76 இன்னிங்ஸ்களில் சுமார் 44 சராசரியுடன் 15 அரைசதங்கள் மற்றும் 7 சதங்கள் உதவியுடன் 3000 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் 149 கேட்சுகள் மற்றும் 15 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் இன்னும் தோனியை முழுமையாக முறியடிக்கவில்லை. இருப்பினும், தோனியின் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்காலத்தில் ரிஷப் பண்ட், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மாற வாய்ப்புள்ளது.