IND vs ENG 1st Test: இன்னும் 350 ரன்கள் இலக்கு! துரத்துமா இங்கிலாந்து அணி..? தடுக்குமா இந்திய அணி?

India's Rollercoaster 1st Test Day 4: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் நான்காவது நாள் பரபரப்பான திருப்பங்களைக் கண்டது. ராகுல் மற்றும் பண்ட் சதங்கள் அடித்தாலும், தேநீர் இடைவேளைக்குப் பின் இந்தியா சரிந்தது. 371 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் 21 ரன்கள் எடுத்தது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகள், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 350 ரன்கள் தேவையாக உள்ளது.

IND vs ENG 1st Test: இன்னும் 350 ரன்கள் இலக்கு! துரத்துமா இங்கிலாந்து அணி..? தடுக்குமா இந்திய அணி?

இந்தியா - இங்கிலாந்து

Updated On: 

24 Jun 2025 14:24 PM

லீட்ஸில் உள்ள ஹெடிங்லி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் (IND vs ENG 1st Test) போட்டியின் நான்காவது நாளான நேற்று அதாவது 2025 ஜூன் 24ம் தேதி பரபரப்பான ஆட்டமாகவே இருந்தது. முதல் இரண்டு செசன்களில் இந்திய அணி அற்புதமாக பேட்டிங் வெளிப்படுத்தியது. இதில் கே.எல். ராகுல் (KL Rahul) மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) சதங்களை அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, இந்திய பேட்டிங் திடீரென சரிய தொடங்கி, அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. நான்காவது நாள் முடிவில், இங்கிலாந்து எந்த விக்கெட்டையும் இழக்காமல் இலக்கைத் துரத்த தொடங்கியது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா..? பாதகமாக அமையுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆரம்பத்தில் ஆதிக்கம்.. பின்னர் திடீர் சரிவு!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் நான்காவது நாளில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் என்ற நிலையில் தொடங்கியது. கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி அபாரமாக ஆடினர். கே.எல். ராகுல் 247 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 118 ரன்கள் எடுத்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேநீர் இடைவேளைக்கு பிறகு, இந்திய பேட்டிங் முற்றிலும் சரிந்தது. 84.2வது ஓவரில் பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். இதன் பிறகு, இந்திய அணி 31 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி சார்பில் இந்திய அணிக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஷ் டோங் தலா 3 விக்கெட்டுகளையும், ஷோயப் பஷீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதே நேரத்தில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸின் அடிப்படையில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் போட்டியின் வெற்றிக்கு இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாள் முடியும் வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை என்பது நல்ல விஷயம்.

10 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெறுமா..?


371 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான பென் டக்கெட் 9 ரன்களும், ஜாக் க்ரௌலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இரு வீரர்களும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை தரவில்லை. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இங்கிலாந்து தொடக்க வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த கடுமையாக போராடினர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆட்டத்தின் கடைசி நாளான இன்று அதாவது 2025 ஜூன் 24ம் தேதி வெற்றி பெற இங்கிலாந்து  அணிக்கு இன்னும் 350 ரன்கள் தேவையாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியா வெற்றி பெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.