IND vs AUS 1st ODI: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள்.. போட்டியை எங்கு காணலாம்..?

IND vs AUS 1st ODI Live Telecast: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (பெர்த்) நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு போட்டி தொடங்கும். இதற்கு முன்னதாக, 8:30 மணிக்கு டாஸ் போடப்படும்.

IND vs AUS 1st ODI: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள்.. போட்டியை எங்கு காணலாம்..?

பயிற்சியின்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா

Published: 

17 Oct 2025 15:00 PM

 IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் (IND vs AUS) மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு சர்வதேச போட்டியில் விளையாட உள்ளனர். இதன் காரணமாக போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் சில நாட்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதில் இருந்து உற்சாகம் தெளிவாகிறது. இந்தநிலையில், இந்தியா – ஆஸ்திரேலிய இடையிலான முதல் ஒருநாள் போட்டியை இந்தியாவில் எந்த சேனல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் என்பது உட்பட போட்டியின் அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்வோம். மேலும், இந்த கிரிக்கெட் போட்டியை நேரடியாகப் பார்க்க எந்த மொபைல் ஆப்பில் பயனர்கள் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறியவும்.

ALSO READ: ரோஹித், கோலிக்கு இதுதான் கடைசி தொடரா..? பாட் கம்மின்ஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஒருநா கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 152 போட்டிகள் நடந்துள்ளன, இதில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 84 போட்டிகளில் வென்றுள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி 58 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும், இரு அணிகளுக்கு இடையே பத்து போட்டிகள் டிராவில் முடிந்தன. இருப்பினும், கடந்த 10 ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஆறு முறை தோற்கடித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்?


இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி ஆப்டஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (பெர்த்) நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு போட்டி தொடங்கும். இதற்கு முன்னதாக, 8:30 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி எங்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்?

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதேநேரத்தில் மொபைல் மற்றும் லேப்டாப்பில் காண விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

ALSO READ: கிரிக்கெட் வாழ்க்கை ஓவரா? – விராட் கோலி கொடுத்த தரமான பதிலடி!

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்

இந்தியா:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் கிருஷ்ணா, பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

ஆஸ்திரேலியா:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஓவன், மேட் ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குன்னேமன், ஜோஷ் பிலிப்.