IND W vs SA W: ஹாட்ரிக் வெற்றியை பெறுமா இந்தியா..? தடை போடுமா தென்னாப்பிரிக்கா..? ஹெட் டூ ஹெட் விவரம்!
ICC Women's World Cup 2025: இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நேருக்குநேர் மோதலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 33 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 20 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்திய மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா அணி
2025 ஒருநாள் உலகக் கோப்பையின் (ICC Women’s World Cup 2025) 10வது போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இன்று அதாவது 2025 அக்டோபர் 9ம் தேதி தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளும். ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையில், இந்திய அணி (Indian Womens Cricket Team) தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று நம்பப்படுகிறது. இந்தியா தனது முதல் இரண்டு போட்டிகளிலும் அற்புதமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, தங்கள் வெற்றியை மீண்டும் பெற முயற்சிக்கும். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் முன்னோட்டம் மற்றும் முக்கிய சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியா – தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நேருக்குநேர் மோதலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 33 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி 20 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல், ஒரு போட்டி முடிவில்லாததாகவே உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. பக்கா பிளான் போட்டு வெற்றி கண்ட இந்திய அணி!
போட்டி எப்போது, எங்கு நடைபெறும்..?
இந்தியா மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை குரூப் நிலை போட்டியின் 10வது போட்டி 2025 அக்டோபர் 9ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும்.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை எங்கு நேரலையில் பார்க்கலாம்?
இந்தியா மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் இடையேயான மகளிர் 2025 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில், இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டார் ஆப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ராதா யாதவ், கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர்.
ALSO READ: பின் தங்கிய இந்திய அணி.. முதலிடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து! உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியல்..!
கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் லெவன்:
லாரா வால்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சினாலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்), க்ளோ டிரையன், நாடின் டி கிளர்க், மசபடா கிளாஸ், அயபோங்கா காக்கா, நோன்குலுலெகோ மலாபா.