IPL 2026: தடுமாறும் சிஎஸ்கே.. கடினமாகும் பயணம்.. பிளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி!
CSK Playoffs: பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி மீதமுள்ள ஒவ்வொரு போட்டியிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சென்னை அணி 6 புள்ளிகளுடன் உள்ளது. மேலும் சிஎஸ்கே மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதிகபட்சமாக 18 புள்ளிகளைப் பெறுவார்கள். 18 புள்ளிகள் கூட பிளேஆஃப் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்யுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே, சிஎஸ்கே ஒரு வலுவான நிகர ரன் ரேட்டை பராமரிக்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2026 சீசனில் இது சிஎஸ்கே அணியின் 5வது தோல்வியை சந்திக்க நேர்ந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தற்போது 8 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன், 6 புள்ளிகளுடன் பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கே ஐபிஎல் 2026 சீசனில் பிளே ஆஃப்க்கு செல்ல இன்னும் எத்தனை புள்ளிகளை பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தீவிரமாகும் தோனியின் காயம்.. ஐபிஎல் 2026ல் விளையாடுவது சந்தேகமா? ஃபிளெமிங் கொடுத்த அப்டேட்!
பிளேஆஃப் டிக்கெட்டுகளைப் பெறுவது எப்படி..?
பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி மீதமுள்ள ஒவ்வொரு போட்டியிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சென்னை அணி 6 புள்ளிகளுடன் உள்ளது. மேலும் சிஎஸ்கே மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதிகபட்சமாக 18 புள்ளிகளைப் பெறுவார்கள். 18 புள்ளிகள் கூட பிளேஆஃப் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்யுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே, சிஎஸ்கே ஒரு வலுவான நிகர ரன் ரேட்டை பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இறுதியில் நிகர ரன் ரேட்டை வைத்துப் பார்க்கும்போது, சிஎஸ்கே அணியால் மற்ற அணிகளை விட சிறப்பாகச் செயல்பட முடியும். சமீபத்திய சீசன்களில், 14 அல்லது 16 புள்ளிகளுடன் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றது இருப்பினும், சென்னை அணி மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட, இந்த சீசனில் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் அவர்களின் நம்பிக்கை தகர்ந்துவிடக்கூடும்.
சென்னை அணியின் பயணம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் மோசமாக அமைந்தது. சென்னை தங்களது சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும், பின்னர் பஞ்சாபிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும், அதன்பிறகு பெங்களூருவிடம் 43 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்றனர். அதன் பிறகு, டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி சென்னை அணி வெற்றியைச் சுவைத்தது. இருப்பினும், அவர்கள் ஹைதராபாத்திடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றனர். ஆனாலும், மும்பையை வீழ்த்திப் பதிலடி கொடுத்தனர். ஆனால், தற்போது குஜராத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளனர்.
ALSO READ: களத்தில் நடுவருடன் வாக்குவாதம்.. அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு!
பயன் பெற்ற குஜராத்:
நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று, +0.118 என்ற நிகர ரன் விகிதத்துடன் 5வது இடத்தில் இருந்தது. டெல்லி 6வது இடத்திலும், குஜராத் 7வது இடத்திலும் இருந்தன. இந்த வெற்றியின் மூலம், குஜராத் 2 முக்கியமான புள்ளிகளைப் பெற்று, தனது நிகர ரன் ரேட்டையும் மேம்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் 2026 சீசனின் முடிவில், குஜராத் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.