22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து! தோல்விக்கு காரணம் என்ன?

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில்  193 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து! தோல்விக்கு காரணம் என்ன?

England Won By 22 Runs

Updated On: 

14 Jul 2025 22:09 PM

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து (England)அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில்  193 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய (India) அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. இந்த நிலையில் 3வது டெஸ்ட்போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.  இந்த நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியில் தோற்று, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். இனி அடுத்த 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த இந்திய வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 193 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 3வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.  இந்தியா சார்பாக ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.  சிராஜ் 4 ரன்களிலும், ஜஸ்பிரித் பும்ரா 54 பந்துகளில் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிக்க : லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் எது..? முழு ரெக்கார்ட் லிஸ்ட் இதோ!

ஜடேஜாவின் முயற்சி குறித்து பிசிசிஐ பதிவு

 

இதையும் படிக்க: இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆசை.. ஏமாற்றத்துடன் பேசிய அஜிங்க்யா ரஹானே..!

மேலும் நிதிஷ் குமார் ரெட்டி 13 ரன்களுடனும், கே.எல். ராகுல் 39 ரன்களுடனும், ரிஷப் பந்த் 9 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். வாஷிங்டன் சுந்தர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. முன்னதாக, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்தது, இந்தியாவுக்கு 193 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு சுப்மன் கில் காரணமா?

இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் சுப்மன் கில்லின் அணுகுமுறைதான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்த ஷுப்மான் கில், லார்ட்ஸ் டெஸ்டில் பெரிதாக சோபிக்கவில்லை. சில நேரங்களில் அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுடன் சண்டையிடுவதையும், மற்ற நேரங்களில் நடுவர்கள் மீது கோபப்படுவதையும் காண முடிந்தது. பேட்டிங்கைப் பொறுத்தவரை கில் முதல் இன்னிங்ஸில் 16 ரன்கள் எடுத்தார், இரண்டாவது மற்றும் மிக முக்கியமான இன்னிங்ஸில் அவரது பேட்டில் இருந்து 6 ரன்கள் மட்டுமே வந்தது.

 

Related Stories
2025 Asia Cup: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதல் உறுதி.. பிசிசிஐ சுவாரஸ்ய தகவல்..!
Sachin Tendulkar Bandra Home: சச்சின் டெண்டுல்கரின் மும்பை மாளிகை.. பாந்த்ரா வீட்டின் வடிவமைப்பு, பரப்பளவு விவரம் இதோ!
Wimbledon 2025: 148 ஆண்டுகளில் முதல் முறை! சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர்… விம்பிள்டனில் கலக்கிய ஜானிக் சின்னர்!
India vs England Test: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் எது..? முழு ரெக்கார்ட் லிஸ்ட் இதோ!
Saina Nehwal – Kashyap’s Divorce: முடிவுக்கு வந்த பேட்மிண்டன் காதல் கதை.. சாய்னா நேவால் – பருப்பள்ளி காஷ்யப் பிரிவதாக அறிவிப்பு!
Ajinkya Rahane: இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆசை.. ஏமாற்றத்துடன் பேசிய அஜிங்க்யா ரஹானே..!