India’s Edgbaston Test Record: எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி..? என்னென்ன சாதனைகள் படைப்பு..?

Indian Cricket Team Performance: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இந்தியாவின் சாதனைகளைப் பார்ப்போம். விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தவர். சேதன் சர்மா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர். ஆனால் இந்தியா இங்கு ஒரு டெஸ்ட் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Indias Edgbaston Test Record: எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி..? என்னென்ன சாதனைகள் படைப்பு..?

இந்தியா - இலங்கை

Published: 

02 Jul 2025 11:45 AM

2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி (IND vs ENG 2nd Test) இன்று அதாவது 2025 ஜூலை 2ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இப்படியான சூழ்நிலையில், இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணியின் டெஸ்ட் சாதனை எப்படி இருக்கிறது, இந்தியாவுடன் தொடர்புடைய 5 சாதனைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்:

எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 416 ரன்கள் ஆகும். கடந்த 2022 ஜூலை மாதம் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்டில், ரிஷப் பண்ட் 146 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜாவும் ஒரு சதம் (104) அடித்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிக ரன்கள்:

இந்திய சுற்றுப்பயணத்திற்கு சற்று முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை விராட் கோலி வைத்திருக்கிறார். எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்தார்.

அதிக விக்கெட்டுகள்:

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை சேதன் சர்மாவின் பெயரில் உள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த 1 டெஸ்டில் சேத்தன் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிக ரன்கள்:

எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் அதிகபட்ச டெஸ்ட் இன்னிங்ஸ் விராட் கோலியின்தாகும். விராட் கோலி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி 149 ரன்கள் எடுத்தார்.

எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி..?


எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணியின் மோசமான சாதனை என்னவென்றால், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இந்திய கிரிக்கெட் அணி பர்மிங்காமில் உள்ள இந்த மைதானத்தில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 7 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.