CSK IPL 2025 Playoff Exit: பிளேஆஃப்களில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே.. விரக்தியை வெளிப்படுத்திய தோனி.. என்ன சொன்னார்..?
MS Dhoni's Disappointment: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே வெளியேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, தோனி அணியின் ரன் எடுத்தல் மற்றும் கேட்ச் பிடித்தல் குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். ஷிவம் துபேவின் மோசமான செயல்பாடு அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அவரது அதிக விலைக்கு ஏற்ப செயல்பாடு இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் இருந்து எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது. நேற்று அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் தகர்ந்தது. ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மட்டுமின்றி, எம்.எஸ்.தோனியும் (MS Dhoni) ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
சென்னை அணி வெளியேற்றம்:
Hat-trick 👌
Powerful start with the bat 🔥
Captain’s knock 🫡The Battle of Kings goes the @PunjabKingsIPL way again this season ❤
Scorecard ▶ https://t.co/eXWTTv7Xhd #TATAIPL | #CSKvPBKS pic.twitter.com/Yk1SOZOzip
— IndianPremierLeague (@IPL) April 30, 2025
பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய பிறகு எம்.எஸ்.தோனி கூறியதாவது, “ஐபிஎல் 2025 சீசனில் நாங்கள் போதுமான ரன்களை எடுத்தது இதுவே முதல் முறை. ஆனாலும் ஸ்கோர் சரியாக இருந்ததா என்றால், இல்லை கொஞ்சம் குறைவாக இருந்தது. நாங்கள் கடைசி ஓவர்களில் இன்னும் சில ரன்கள் எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நாங்கள் எல்லா கேட்சுகளையும் எடுத்திருக்க வேண்டும்.
கர்ரன் சர்மா ஒரு போர்வீரன் என்று சொல்வேன். அது நம் அனைவருக்கும் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, இதுவரை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முயற்சித்த போதெல்லாம், ஸ்லோ பிட்ச் காரணமாக அவரால் ரன் எடுக்க முடியவில்லை. ஆனால், இன்றைய விக்கெட் இந்த சீசனில் எங்கள் சொந்த மைதானத்தில் சிறப்பாக அமைந்தது. பிரெவிஸுக்கு நல்ல பலம் உள்ளது. அவர் ஒரு சிறந்த ஃபீல்டர். அவர் களத்திற்கு ஆற்றலையும் கொண்டு வருகிறார். வரும் சீசனில் அவர் எங்களுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக இருக்க முடியும்.” என்று தெரிவித்தார்.
ஷிவம் துபே ஏமாற்றம்:
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு பல வீரர்கள் பொறுப்பு என்றாலும், ஷிவம் துபேவின் செயல்திறன் ஏமாற்றத்தையே தந்தது. ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்பு, சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர் ஷிவம் துபேக்கு ரூ. 12 கோடி கொடுத்து தக்கவைத்தது. ஆனால், எந்த பலனும் இல்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் கூட ஷிவம் துபே 6 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த சீசனில் அவர் 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 248 ரன்கள் மட்டுமே எடுத்தார். சிஎஸ்கே பிளேஆஃப்களுக்கு தகுதி பெறத் தவறியதற்கு, அவர் ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடத் தவறியது ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.