Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Highest ODI Scores: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் பதிவு.. புது சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி!

Australia's Record ODI Score: ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 431/2 என்ற வரலாற்று சாதனை ஸ்கோரைப் பதிவு செய்தது. இது ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ODI ஸ்கோர் மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

Highest ODI Scores: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் பதிவு.. புது சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி!
ஆஸ்திரேலிய அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Aug 2025 20:41 PM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி (Australia Cricket) 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்தது. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒருநாள் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்றால், கடந்த 2022ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு (South Africa) எதிரான 3வது ஆஸ்திரேலிய அணி 431 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவு செய்தது. இந்தநிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குவிக்கப்பட்ட டாப் 5 ஸ்கோர் எண்ணிக்கை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 2027 உலகக் கோப்பை நடைபெறும் ஸ்டேடியங்கள் இதுதான்.. ஐசிசி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

ஒருநாள் கிரிக்கெட்டில் 5 அதிகபட்ச ரன்கள்:

  •  இங்கிலாந்து, 498/4

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 498 ரன்கள் எடுத்தது.

  •  இங்கிலாந்து, 481/6

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இங்கிலாந்து அணியே 2வது இடத்தில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி  50 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்தது.

  • இங்கிலாந்து, 444/3

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இங்கிலாந்து அணியே மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்திருந்தது.

  • இலங்கை, 443/9

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இலங்கை அணி 4வது இடத்தில் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 50 ஓவர்களில் 443 ரன்கள் எடுத்திருந்தது.

  • தென்னாப்பிரிக்கா, 439/2

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 5வது இடத்தில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 439 ரன்கள் எடுத்தது.

ALSO READ: ஆசியக் கோப்பையில் அனுபவம் பலத்துடன் களம்.. ரஷீத் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

போட்டியில் நடந்தது என்ன..?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தங்கள் சொந்த மண்ணில் தோற்கடித்தது. ஆனால் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கடந்த 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதற்கு பழிவாங்கியது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 142 ரன்களும், மிட்செல் மார்ஷ் மற்றும் க்ரீன் தலா ஒரு சதம் அடித்தனர். இலக்கை த்உரத்திய தென்னாப்பிரிக்கா அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2025ம் ஆண்டில் விளையாடிய எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் இதுவே மிகப்பெரிய வெற்றியாகும்.