Asia Cup 2025 Prize Money: 2025 ஆசியக் கோப்பையில் கோடியை அள்ளப்போவது யார்..? பரிசுத்தொகையை எவ்வளவு தெரியுமா?

Asia Cup 2025 Final: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுத் தொகையை அதிகரித்து வருகிறது. இந்த முறையும், வெற்றி பெறும் அணிக்கு முன்பை விட அதிக பரிசுத் தொகை கிடைக்கும். 2025 ஆசிய கோப்பைக்கான பரிசுத் தொகை 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

Asia Cup 2025 Prize Money: 2025 ஆசியக் கோப்பையில் கோடியை அள்ளப்போவது யார்..? பரிசுத்தொகையை எவ்வளவு தெரியுமா?

2025 ஆசியக் கோப்பை

Published: 

28 Sep 2025 17:06 PM

 IST

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய 2025 ஆசிய கோப்பையானது (2025 Asia Cup) இன்றுடன் அதாவது 2025 செப்டம்பர் 28ம் தேதி முடிவடைகிறது. இன்றைய இறுதிப்போட்டியில் 41 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. பைனலில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டத்துடன் கணிசமான பரிசுத் தொகையும் வழங்கப்படும். இந்தநிலையில், 2025 ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆசிய கோப்பை 2025 பரிசுத் தொகை:


ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுத் தொகையை அதிகரித்து வருகிறது. இந்த முறையும், வெற்றி பெறும் அணிக்கு முன்பை விட அதிக பரிசுத் தொகை கிடைக்கும். 2025 ஆசிய கோப்பைக்கான பரிசுத் தொகை 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

ALSO READ: 28ம் தேதியில் இந்திய அணிக்கு எவ்வளவு ராசியா..? தொட்டதெல்லாம் வெற்றி..!

  • 2022ம் ஆண்டு டி20 வடிவத்தில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பையில், இலங்கை பட்டத்தை வென்றதுடன் US$200,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,77,37,020 பரிசுத் தொகையையும் பெற்றது. பாகிஸ்தான் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. US$100,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 88,68,510 பரிசுத் தொகையைப் பெற்றது.
  • 2023ம் ஆண்டு ஒருநாள் வடிவத்தில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றபோது, ​ இந்திய அணிக்கு US$250,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,21,71,275 பரிசுத் தொகை கிடைத்தது. மறுபுறம், இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததற்காக US$125,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,10,85,637.50 பரிசுத்தொகையை பெற்றது.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் 2025 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியுடன் சேர்த்து 3வது முறையாக மோத இருக்கிறது. இந்த முறை, 2025 ஆசியக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு US$300,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,66,05,530 பரிசுத் தொகை வழங்கப்படும். அதேநேரத்தில், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு US$150,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,33,02,765 பரிசுத் தொகை வழங்கப்படும்.

ALSO READ: பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு – யார் இவர் ?

  • 2022ம் ஆண்டில் டி20 வடிவத்தில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோது வழங்கப்பட்ட 200,000 அமெரிக்க டாலர்களாக இருந்த ஆசிய கோப்பை 2025க்கான பரிசுத் தொகை இப்போது 300,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில், 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 2,66,05,530 (26 மில்லியன் ரூபாய்) ஆகும். இரண்டாம் இடம் பெறுபவர் ரூ. 1,33,02,765 (13.3 மில்லியன் ரூபாய்) பெற இருக்கிறார்கள்.