Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் திடீரென போட்டி நேரம் மாற்றம்.. தாமதமாக விளையாடும் 8 அணிகள்..!

Asia Cup 2025 Schedule Change: 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. UAE-யின் அதீத வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, போட்டிகளின் நேரம் மாலை 6:30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு) மாற்றப்பட்டுள்ளது.

Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் திடீரென போட்டி நேரம் மாற்றம்.. தாமதமாக விளையாடும் 8 அணிகள்..!

2025 ஆசியக் கோப்பை

Published: 

30 Aug 2025 19:36 PM

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் அபுதாபியின் ஷேக் சயீத் மைதானம் மற்றும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆசிய கோப்பையை நடத்த தயாராக உள்ளன. இந்த போட்டிக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில், ஆசிய கோப்பை 2025ல் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொடூர வானிலையை மனதில் கொண்டு இந்திய அணி (Indian Cricket Team) உள்பட பல அணிகளின் போட்டி நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ: ஆசியக் கோப்பை டி20 அதிகபட்ச ஸ்கோர்கள்.. டாப் லிஸ்டில் இந்தியா, பாகிஸ்தான்..!

போட்டி நேர மாற்றம்:


2025 ஆசியக் கோப்பை போட்டிகள் அனைத்தும் இப்போது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணிக்கு) தொடங்குகிறது. முன்னதாக, வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, இந்த போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருந்தன. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் வெப்பமான வானிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த முடிவு குறித்து ஒளிபரப்பாளரிடம் கேட்டதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாகவே, செப்டம்பர் மாதங்களில் வளைகுடா நாடுகளில் பகலில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும். இந்த கடும் வெப்பமானது மாலை வரை வெப்பமாக இருக்கும். இத்தகையை கடுமையான வெயிலின்போது வீரர்கள் விளையாடுவதை தடுக்க, அனைத்து ஆசிய கிரிக்கெட் வாரியங்களும் போட்டிகளின் நேரத்தை மாற்றும்படி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் சிறந்த சூழ்நிலையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் வகையில், போட்டிகளின் நேரத்தை அரை மணி நேரம் நீட்டிக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ALSO READ: ஆசியக் கோப்பையில் டாப் 6 அதிரடி பார்ட்னர்ஷிப்கள்.. விராட் கோலி – கே.எல். ராகுல் சாதனை!

8 அணிகளுக்கு இடையே கடும் போட்டி:

2025 ஆசியக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங்கும் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணியை எதிர்கொள்ளும். பின்னர் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும், இந்த போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். இதன் பிறகு, இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி ஓமனுக்கு எதிராக குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் தனது கடைசி போட்டியை விளையாடுகிறது. அதே நேரத்தில், சூப்பர்-4 போட்டிகள் வருகின்ற 2025 செப்டம்பர் 20 முதல் நடைபெறுகிறது. தொடர்ந்து, இறுதிப் போட்டியானது 2025 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.