Sreesanth-Harbhajan Fight: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வைரலாகும் ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சண்டை வீடியோ.. கேள்வி எழுப்பிய ஸ்ரீசாந்தின் மனைவி..!
Sreesanth Wife Statement: 2008 ஐபிஎல் போட்டியில் ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் இடையே நடந்த சண்டையின் வீடியோவை லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்க் வெளியிட்டதால் பழைய சர்ச்சை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, இந்தச் செயலைக் கண்டித்துள்ளார்.

ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் சிங் சண்டை
ஐபிஎல் (IPL) வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஒன்றான ஸ்ரீசாந்த் – ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) விஷயம் 17 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. ஹர்பஜன் சிங்கும் ஸ்ரீசாந்தும் (Sreesanth) மற்றும் இந்திய ரசிகர்களும் இந்த சம்பவத்தை மறந்துவிட்டு தங்கள் வாழ்க்கையில் சிறப்பான இடத்தில் உள்ளனர். இந்தநிலையில், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் இந்த சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டு பழைய சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளனர். இதை தொடர்ந்து, ஸ்ரீசாந்தின் மனைவி இவர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடந்தது என்ன..?
The famous slap in my podcast with @MClarke23 on #beyond23 – part 3 of my podcast. I love @harbhajan_singh – but after 17 years it was time to reveal it. Lots and lots more to reveal but that will now only be in the movie that’s in the works supervised by @SnehaRajani on my… pic.twitter.com/EhPaIRAZ0F
— Lalit Kumar Modi (@LalitKModi) August 29, 2025
மைக்கேல் கிளார்க்கின் பாட்காஸ்ட் பியாண்ட் 23 கிரிக்கெட்டில் ஒரு உரையாடலின்போது லலித் மோடி இந்த வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது. முன்னதாக ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த காட்சிகளை அங்கிருந்த ஃபீல்டு கேமராக்கள் அணைக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு கேமராக்களில் ஒன்று மட்டுமே இயக்கப்பட்டது. போட்டி முடிந்ததும், இரு அணிகளின் வீரர்கள் கைகுலுக்கி கொண்டிருந்தனர். அப்போது, ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் கைகுலுக்கி வந்தபோது, ஹர்பஜன் தனது பின் கையால் ஸ்ரீசாந்தை அறைந்தார். இதன் பிறகு, ஹர்பஜன் சிங்குக்கு 11 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ALSO READ: ஐபிஎல்லிலும் ஆஹா! ஓஹோ! அஸ்வின் படைத்த சாதனைகள் இவ்வளவா..?
கோபமடைந்த ஸ்ரீசாந்த் மனைவி:
Instagram story of Sreesanth’s wife regarding the Criticism of 2008 Harbhajan Singh and Sreesanth incident .#ShubmanGill #YashasviJaiswal
#KLRahul #ViratKohli #AsiaCup#IPL pic.twitter.com/beKWBR7Xqw— Monish (@Monish09cric) August 30, 2025
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்கை கடுமையாக சாடினார். அதில், “லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்க், நீங்கள் வெட்கப்பட வேண்டும். மலிவான புகழ் மற்றும் பார்வைகளுக்காக நீங்கள் 2008 சம்பவத்தை எழுப்புகிறீர்கள். ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் இருவரும் இப்போது தங்கள் வாழ்க்கையில் முன்னேறிவிட்டனர், இப்போது அவர்கள் குழந்தைகளின் தந்தைகள். இதுபோன்ற சூழ்நிலையில், பழைய காயங்களைத் தோண்டி எடுப்பது மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் அருவருப்பான செயல்.
இது வீரர்களை மட்டுமல்ல, அவர்களின் அப்பாவி குழந்தைகளையும் காயப்படுத்துகிறது. அவர்கள் எந்த தவறும் இல்லாமல் சங்கடத்தையும் கேள்விகளையும் எதிர்கொள்கின்றனர்.” என்றார்.
ALSO READ: 3 மாத மௌனத்தை கலைத்த ஆர்சிபி.. உயிரிழந்த ரசிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை:
தொடர்ந்து ஸ்ரீசாந்தின் மனைவில் புவனேஸ்வரி, “”இத்தகைய இழிவான மற்றும் மனிதாபிமானமற்ற செயலைச் செய்ததற்காக உங்கள் இருவரும் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். எந்த வீடியோவும் ஸ்ரீசாந்தின் கண்ணியத்தைப் பறிக்க முடியாது. குடும்பங்களையும் குழந்தைகளையும் காயப்படுத்துவதற்கு முன்பு ஒருவர் கடவுளுக்கு பயப்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.