Abhishek Sharma: அடுத்தடுத்து ஜீரோ.. T20 உலக்கோப்பையில் அதிக ‘ டக்அவுட்’.. அபிஷேக் சர்மாவின் மோசமான சாதனை!

'Most Ducks' Record In T20 World Cup: போட்டிக்கு முன்பு அபாரமான ஃபார்மில் இருந்த இடது கை தொடக்க வீரரான அவர், தனது முதல் மூன்று போட்டிகளிலும் டக்-அவுட்களைப் பதிவு செய்துள்ளார். அந்தவகையில், நேற்றைய தினம் (பிப்.18) அகமதாபாத்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் மூன்றே பந்துகளில் டக்-அவுட் ஆனார்.

Abhishek Sharma: அடுத்தடுத்து ஜீரோ.. T20 உலக்கோப்பையில் அதிக ‘ டக்அவுட்’.. அபிஷேக் சர்மாவின் மோசமான சாதனை!

அபிஷேக் சர்மா

Updated On: 

19 Feb 2026 07:57 AM

 IST

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடிய பிறகும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இன்னும் தனது கணக்கைத் திறக்கவில்லை. இதனால், டி20 உலகக் கோப்பையில் தனது முதல் ரன்னுக்கான அபிஷேக் சர்மாவின் காத்திருப்பு இன்னும் நீண்டுள்ளது. போட்டிக்கு முன்பு அபாரமான ஃபார்மில் இருந்த இடது கை தொடக்க வீரரான அவர், தனது முதல் மூன்று போட்டிகளிலும் டக்-அவுட்களைப் பதிவு செய்துள்ளார். அந்தவகையில், நேற்றைய தினம் (பிப்.18) அகமதாபாத்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் மூன்றே பந்துகளில் டக்-அவுட் ஆனார். இதில், சுவாரஸ்யமாக, அபிஷேக் சர்மா முகமது சிராஜின் ஜெர்சியை அணிந்திருந்தார், ஆனால் அதுவும் அவருக்கு எந்த அதிர்ஷ்டத்தையும் தேடித்தரவில்லை.

இதையும் படிக்க: IND vs NED: 5 கேட்சுகள் மிஸ்.. கைகொடுத்த துபே.. நெதர்லாந்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் எப்படி?

3 போட்டிகளிலும் தொடர் டக்அவுட்:

அதன்படி, பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 தொடக்க ஆட்டத்தில், அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆனார். தொடர்ந்து, வயிற்று பிரச்சனை காரணமாக நமிபியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் அவர் விளையாடவில்லை. அதைதொடர்ந்து, கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் 4 பந்துகளில் டக்-அவுட் ஆனார். தற்போது நேற்றைய நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 3 பந்துகளில் டக்-அவுட் ஆகியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில் மோசமான சோதனை:

இதன்மூலம், நடப்பு டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட் ஆகி அபிஷேக் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். அதோடு, இதுபோன்று டி20 உலகக்கோப்பை போட்டிகளில் மூன்று முறை தொடர் டக்அவுட்டாகிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள்:

3 – ஆஷிஷ் நெஹ்ரா (IND, 2010-2016)

3 – ஆண்ட்ரே பிளெட்சர் (WI, 2009)

3 – ரோஜர் முகசா (UGA, 2024)

3 – அபிஷேக் சர்மா (IND, 2026)

இதையும் படிக்க : Kuldeep Yadav: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?

அவரது கடைசி 7 இன்னிங்ஸ்களில் 5 டக்அவுட் ஆகியுள்ளார். போட்டிக்கு முன்னதாக, தொடர் டக் அவுட் சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர அபிஷேக்கிற்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு எளிய ஆலோசனையைக் கூறினார். அதாவது, முதல் சிங்கிளை எடுத்துக் கொள்ளுங்கள், அவ்வளவுதான். அதன் பிறகு நீங்கள் அடித்து விளையாடத் தொடங்கலாம் என்று அவர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லாக்கரில் 2.7 கிலோ தங்கம் திருட்டு.. ஆன்லைன் சூதாட்டத்திற்காக அடமானம் வைத்த வங்கி உதவி மேலாளர்
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துகள்.. வியக்கும் உலக நாடுகள்..
பாக்கெட் பால் குடிக்கிறீர்களா?.. நீங்கள் குடிக்கும் பால் பாதுகாப்பானதுதானா?..
மிதிலாவின் 700 ஆண்டுகால ‘பஞ்சி’ திருமண மரபு: மங்கும் பாரம்பரியம், நிலைக்கும் அறிவியல்