Vastu Tips: வீட்டில் மயிலிறகை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. வாஸ்து சொல்வது என்ன?
வாஸ்து சாஸ்திரத்தில் மயில் இறகு நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வீட்டில் மயில் இறகு வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, எதிர்மறை ஆற்றலைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. கால சர்ப்ப தோஷம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறவும் மயில் இறகு உதவும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மயில் தோகை
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தைப் (Vastu Shastra) பொறுத்தவரை எந்த பொருளும் அது இருக்கக்கூடிய இடத்தைப் பொறுத்து நேர்மறை அல்லது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை இவ்வுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு கடவுளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மயிலை எடுத்துக் கொண்டால் அது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அது தோகையை விரித்தாடும் அழகைக் காண கண்கோடி வேண்டும். சாஸ்திரத்தைப் பொறுத்தவரை மயில் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. மயில் முருகனின் வாகனமாக அறியப்படுகிறது.அதேசமயம் மயில் சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. கிருஷ்ணர் கூட தனது கிரீடத்தில் மயில் இறகை (Peacock Feather) அணிந்துள்ளார். பழங்காலத்திலிருந்தே, முனிவர்களும் துறவிகளும் மயில் இறகுகளால் செய்யப்பட்ட எழுதுகோல்களைப் பயன்படுத்தி தங்கள் வேதங்களை எழுதியதாக நம்பப்படுகிறது.
கனவிலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ மயிலைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய மயில்கள் தீய சக்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கின்றன என்று கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் மயில் இறகை வைப்பது நேர்மறையான எண்ணங்களை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
வீட்டில் மயிலிறகு வைப்பதால் கிடைக்கும் பலன்கள்
ஒரு வீட்டில் மயில் இறகு வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அந்த வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்கள் நிறைவாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் மயில் இறகை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றல்களை அழித்து நேர்மறை ஆற்றல்களை செயல்படுத்தும் என நம்பப்படுகிறது. பல்வேறு தோஷத்தால் அவதிப்படுபவர்களுக்கு மயில் இறகுகளால் நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ள ராசிக்கார்கள் இரவு தூங்கும் போது ஏழு மயில் இறகுகளை தலையணைக்கு அடியில் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்தல் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து தடைகளும் விலகும் என சொல்லப்படுகிறது. மேலும் நீங்கள் இருக்கும் அறையின் மேற்கு பக்க சுவரில் மயில் இறகுகளை வைப்பதும் கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கிறது.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் மயில் இறகுகளை வைப்பது நிதி நெருக்கடி மற்றும் திடீர் சிரமங்களைத் தடுக்கும்.நீங்கள் பதட்டமாகவும் அமைதியற்றதாகவும் உணர்ந்தால், உங்கள் படுக்கையறையில் ஒரு மயில் இறகை வைத்திருங்கள். மயில் இறகை தன்னுடன் வைத்திருப்பவருக்கு எப்போதும் துரதிர்ஷ்டம் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, செவ்வாய்க்கிழமை மயில் இறகில் அனுமனின் குங்குமத்தை பூசவும். இப்படிச் செய்வதால் எதிரிகளின் பயம் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
(வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை)