திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Karthigai Deepam : பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில்  கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3, 2025 மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம்  - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

Updated On: 

03 Dec 2025 18:28 PM

 IST

திருவண்ணாமலை, டிசம்பர் 3 :  திருவண்ணாமலையில் (Tiruvannamalai) ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் டிசம்பர் 3, 2025 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கார்த்திகை தீபத்திருவிழா (Karthigai Deepam), கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்வின் தொடக்க நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பாக ஏற்றப்பட்டது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நடிகை ரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாலை மகா தீபம் வெகு சிறப்பாக ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில்  கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3, 2025 மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஒளி வடிவமான இறைவனை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கார்த்திகை தீபம்  தொடர்ந்து 11 நாட்கள் எரிய விடப்படும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்கள் மலை ஏற அனுமதி அளிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : கார்த்திகை தீபம்: பரணி தீப வழிபாடு எப்படி, எப்போது செய்ய வேண்டும்? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்!!

10 நாள் திருக்கார்த்திகை திருவிழாவின் சிறப்பு

அருணாசலேஸ்வரர் கோயில் ஐந்துபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாள் தீபத் திருவிழா சிறப்புடன் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் 24, 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 3, 2025 அன்று அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ஏகன் அனைகன், அனைகன் ஏகன் என்ற அத்வைத தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், முதலில் தீபம் 1, 2, 3, 4, 5 என ஏற்றப்பட்டு, பின்னர் ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அம்மன் சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இதையும் படிக்க :  கார்த்திகை தீபம்: பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு – விவரம் இதோ

மேலும், இன்று அதிகாலையில் நடைபெற்ற பரணி தீபத் திருவிழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகர் ராஜ், நடிகை ரோஜா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோமீட்டர் நீளமான அண்ணாமலை மலையை கிரிவலம் செய்து, வழித்தடத்தில் உள்ள எட்டு லிங்கங்களையும் தரிசனம் செய்தனர். 

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!