Tirupati: டிசம்பரில் திருப்பதி செல்ல திட்டமா? – தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. ஆன்லைனில் www.ttd.org.in மூலம் டிக்கெட் பெறலாம். அர்ஜித சேவா, அங்க பிரதக்ஷிணம், தங்குமிடம், ஸ்ரீவாணி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

Tirupati: டிசம்பரில் திருப்பதி செல்ல திட்டமா? - தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி

Published: 

18 Sep 2025 08:36 AM

 IST

திருப்பதி, செப்டம்பர் 18: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்காக தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் டிக்கெட்டுகளைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் அங்க பிரதக்ஷிணம், தங்குமிடம், மெய்நிகர் சேவா டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி மற்றும் முதியோருக்கான தரிசனம் தொடர்பான சேவைகளை இங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி அர்ஜித சேவா டிக்கெட்டுகள் செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதேபோல் அர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படும் முறையான லக்கி டிப் பதிவு இன்று முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு

இந்த மின்னணு டிப் ஆஃப் சர்வீஸ் டிக்கெட்டுகளுக்கு அன்று காலை 10 மணி வரை பதிவு செய்ய முடியும். அதேசமயம் செப்டம்பர் மாதம் முதல் மின்னணு டிப் மூலம் ஆன்லைனிலும் அங்க பிரதக்ஷிண டோக்கன்கள் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 20 முதல் 22 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து பணம் செலுத்துபவர்களுக்கு லக்கி டிப் மூலம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Also Read:  திருப்பதியில் வரும் ரூல்ஸ்.. ரீல்ஸ் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை!

மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவா, சஹஸ்ரதீபலங்கார சேவா, மற்றும் அர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், மெய்நிகர் தரிசன சேவைகளுக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 22 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முடிவு

அதுமட்டுமல்லாமல் டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் ஒதுக்கீடு முறையானது செப்டம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணத்தில் சிறப்பு நுழைவு தரிசனம் செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும், அறை ஒதுக்கீடு 24 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Also Read: ஆத்தாடி.. திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!

அறை ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் பக்தர்களின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேவை டிக்கெட்டுகளுடன் தங்குமிட அறை ஒதுக்கீட்டையும் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையுடன் சேர்ந்து, திருப்பதிக்கும் செப்டம்பர் 24 அன்று பிற்பகல் 3 மணிக்கு தங்குமிட அறை ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்படும் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை https://www.tirumala.org/ என்ற இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.