Astrology: ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்கு செம லக்.. என்னென்ன நடக்கும் பாருங்க!
ஆகஸ்ட் 2025ல் புதன், சூரியன், வெள்ளி, சனி, செவ்வாய் என ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் மேஷம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவு, தொழில் வளர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஜோதிடப்பலன்
ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் அதிபதியான சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசிக்குள் நுழைவார். இதனால் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருக்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் இயக்கத்தில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் இயக்கம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக ஆகஸ்ட் மாதம், ஐந்து முக்கிய கிரகங்களான புதன், சூரியன், வெள்ளி, சனி மற்றும் செவ்வாய் ஆகியவை தங்கள் ராசிகளை மாற்றும். இதனால் சில ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அதனைப் பற்றிக் காணலாம்.
எந்த ராசிக்குள் எந்த கிரகம் செல்லும்?
அதன்படி 2025ம் ஆண்டூ ஆகஸ்ட் 9 ஆம் தேதி கடக ராசிக்குள் புதன் நுழைகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்குள் நுழையும் நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அந்த ராசிக்கு அதன் பெயர்ச்சி தொடங்கும். அதேசமயம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவார். சனி மீன ராசியில் வக்ரமாக இருப்பார். செவ்வாய் கன்னி ராசியில் இருப்பார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் பெறும் ராசிகள் என்னென்ன?
- மேஷம்: ஆகஸ்ட் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். வீடு அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாய் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- மிதுனம்: இந்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அளவுக்கு பணம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. மன அமைதி கிடைக்கும். பெற்றோருடன் சேர்ந்து ஆடைகள் மற்றும் நகைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். பேச்சு தொடர்பான வேலைகளால் ராசிக்காரர்கள் பயனடைவார்கள்.
- கன்னி: கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். அதிர்ஷ்டம் அவர்களுடையதாக மாறும். வீடு அல்லது பிளாட் வாங்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற வாய்ப்புள்ளது. கையில் கிடைக்காமல் நிற்கும் பணம் கிடைப்பதன் மூலம் சில பணிகள் வெற்றி பெறும். பெற்றோரின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கும். ஊழியர்கள் தங்கள் வேலையால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். சமூக மரியாதை அதிகரிக்கும்.
- துலாம்: ஆகஸ்ட் மாதம், துலாம் ராசிக்காரர்களின் வங்கி இருப்புத்தொகை அதிகரிக்கும். ஆரோக்கியமும் சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடனான உறவுகள் மேம்படும். தொழிலில் சிறப்பு நன்மைகள் கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். நீங்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவீர்கள்.
- கும்பம்: எல்லாவிதமான பிரச்னைகளில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும். வருமானமும் செல்வமும் பெருகும். புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்புகள் அமையும். அனைத்து தடைகளையும் எளிதில் கடந்து செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் தொடர்பான விஷயங்களில் அன்பு அதிகரிக்கும்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)