Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: 5 ராசிகளுக்கு கால யோகம்.. இனிமேல் ராஜ மரியாதை தான்!

Horoscope: செப்டம்பர் 5ம் தேதிக்குப் பிறகு சந்திரன் மகர ராசியில் சஞ்சரித்து கால யோகத்தை உருவாக்குகிறது. திருவோண நட்சத்திரம் சூரிய யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகத்தை உருவாக்குகிறது. மேஷம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, நிதி லாபம், திருமண யோகம் போன்ற நற்பலன்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: 5 ராசிகளுக்கு கால யோகம்.. இனிமேல் ராஜ மரியாதை தான்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Sep 2025 12:03 PM IST

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் செயல்பாடு காரணமாக அவ்வப்போது ராசிகளில் யோக பலன்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சிவன் மற்றும் பார்வதியின் ஆசியுடன், செப்டம்பர் 5 க்குப் பிறகு சந்திரன் மகர ராசியில் சஞ்சரித்து, அங்கு ஏற்கனவே இருக்கும் சுக்கிரனுடன் ‘கால யோகம்’ பலனை உருவாக்குகிறார். இதனுடன், திருவோணம் நட்சத்திரம் ‘சூரிய யோகம்’ மற்றும் ‘சர்வார்த்த சித்தி யோகம்’ ஆகியவற்றை உருவாக்குகிறது. இந்த அரிய கிரக சேர்க்கைகள் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மேஷம், கடகம், துலாம், மகரம் மற்றும் மீனம் போன்ற 5 ராசிக்காரர்களுக்கு, தொழில் முன்னேற்றத்தையும் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் தரும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் என்ன பலன்கள் பெறுவார்கள் என்பது பற்றிக் காணலாம்.

5 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

  1. மேஷம்: இந்த காலகட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும் அலுவலகத்திலும் அற்புதமான அனுபவங்களைத் தரும். அவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். சக ஊழியர்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். தொழிலதிபர்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார்கள்
  2. கடகம்: கடக ராசிக்காரர்களின் ஆசைகளை நிறைவேற்றும் யோகம் இந்த காலக்கட்டத்தில் உள்ளது. வாகனம், வீடு, சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். ஜவுளித் தொழில் செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தாய் வழி  உறவினர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மனைவியுடன் பணிபுரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதிநிலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் உருவாகும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  3. துலாம்: தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.  எந்த தொழில் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணமும் செல்வமும் அதிகரிக்கும். சமூக மரியாதை மற்றும் புகழைப் பெறுவீர்கள். படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்கள் வெளிப்படும். மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்புகள் மேம்படும்.
  4. மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலக்கட்டம் நிதி ரீதியாக மிகவும் நன்மை பயக்கும். பங்குச் சந்தை மற்றும் முதலீடு போன்றவற்றின் மூலம் திடீர் வருமானம் கிடைக்கும். வாழ்க்கை திட்டமிட்டபடி செல்லும். அலுவலகத்தில் உதவிகரமாக சக ஊழியர்கள் இருப்பார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது, நீண்டகால ஆசைகள் நிறைவேறும். உங்கள் உடல்நலத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  5. மீனம்: இந்த காலகட்டத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், நிதி ரீதியாக நல்ல பலன்களைத் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவால்களை ஏற்றுக்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஆட்டோமொபைல் துறையில் பணிபுரிபவர்களுக்கும், அரசு வேலைகளை நாடுபவர்களுக்கும் இது ஒரு நல்ல காலம். சிவபெருமானின் ஆசியுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு, அது விரைவில் நல்ல வரன் அமையும்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் அமைந்துள்ள தகவல் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)