AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

சாமுத்திரீக சாஸ்திரத்தின் படி, உடலில் உள்ள மச்சங்கள் ஒருவரின் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கூறுகின்றன. நெற்றி, முகம், கைகள் மற்றும் உள்ளங்கால்களில் உள்ள மச்சங்கள் குறிப்பிட்ட பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. நெற்றியில் மச்சம் இருப்பது மங்களகரமானதாகும். அதேபோல் பிற இடங்களில் இருந்தால் என்ன பலன் எனப் பார்க்கலாம்.

உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
மச்சத்தின் கணிப்புகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Jun 2025 14:13 PM IST

நம்முடைய உடம்பில் மச்சங்கள் என்பது உச்சந்தலை முதல் கால் வரை எங்கு வேண்டுமானாலும் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். மச்சங்கள் பெரும்பாலும் அழகின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவை பண்டைய காலம் தொட்டு ஒரு நபரின் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடையவையாக பார்க்கப்பட்டு வருகிறது. சாமுத்திரிக் சாஸ்திரத்தின் படி ஒரு நபரின் ஜாதகம் தீர்மானிக்கப்படுவதில் மச்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அவை சம்பந்தப்பட்ட நபரின் பண்பு நலன்களை வெளிப்படுத்துபவையாகவும் அமைய பெற்றுள்ளது. இப்படியான நிலையில் உடலில் எந்தெந்த இடங்களில் மச்சங்கள் இருப்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது என்பது பற்றி நாம் காணலாம்.

எந்த இடங்களில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்?

நெற்றியில் மச்சம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் வலது பக்கத்தில் இருப்பது கூடுதல் சிறப்பை தரும் என சொல்லப்படுகிறது. அத்தைக்கு நபர்கள் சமூக ரீதியாக மதிக்கப்படுபவர்களாகவும் தொழில் வாழ்க்கையில் வெற்றிகரமானவர்களாகவும் வளம் வருவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த நபர்கள் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் எடுத்த விஷயங்களில் சிறப்பான பலனை பெறுவார்கள். அதேசமயம் நெற்றியின் இடது பக்கத்தில் இருக்கும் மச்சம் பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் இயல்பு வாழ்க்கையை வாழ்பவர்களை குறிப்பதாக உள்ளது.

முகத்தில் இருந்தால் பலன்கள்

சிலருக்கு இரண்டு புருவங்களுக்கும் இடையில் பொட்டு வைக்கும் இடத்தில் மச்சம் இருக்கலாம். இதுவும் சாஸ்திரப்படி புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்தகைய நபர்கள் கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும் தொலைநோக்குப் பார்வை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இயல்பாகவே அமைதியான சுபாவம் உடைய இத்தகைய நபர்கள் ஆன்மீக விஷயத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள் என்றும், ஒருபோதும் பணப்பற்றாக்குறையை காண மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் மூக்கில் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் அடிக்கடி பயணம் செய்ய விரும்புவர்களாகவும் வாழ்க்கையில் நிறைய பயண அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியை பெறுவார்கள்.

கைகளில் இருந்தால் என்ன நடக்கும்?

மேல் உதட்டில் வலது பக்கத்தில் உள்ள மச்சம் அந்த நபர் இயற்கையிலே மிகவும் பாசம் மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர் என்பதை குறிக்கிறது. அதேபோல் வலது உள்ளங்கையில் மோதிர விரல் அல்லது சுண்டு விரல் கீழ் மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அறிகுறியாகவும், இவர்கள் நிதி ரீதியாக மிகவும் வலிமையாக இருப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டாலும் வெற்றியை பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

உள்ளங்கால்களில் உள்ள மச்சம் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுபவர்களுக்கும், தைரியமாக ஒரு விஷயத்தை எதிர்கொள்பவர்களுக்கும் இருக்கும் என சொல்லப்படுகிறது. வயிற்றில் உள்ள மச்சம் செல்வத்தையும், உணவின் மீது உள்ள ஆர்வத்தையும் குறிப்பதாக கூறப்படுகிறது. உங்களது மச்சம் தொப்புளுக்கு அருகில் இருந்தால் அவர்கள் செல்வ வளம் பெறுபவர்களாக வாழ்க்கையில் திகழ்வார்கள் என்பது அர்த்தமாகும்.

(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us