பங்குனி உத்திரம் 2026.. வேண்டுதல்கள் நிறைவேற முக்கிய விரதமுறைகள்.. முழு விவரம்!!

Panguni Uthiram 2026: இந்த நாளில் முறைப்படி விரதமிருந்து முருகனிடம் வேண்டினால் 2026ஆம் ஆண்டு மிகச் சிறந்த பலன்கள் கிட்டும் என்று ஜோதிடர்கள் கூறிகின்றனர். குறிப்பாகத் திருமணத் தடையுள்ளவர்கள் இந்நாளில் தாலிச் சரடு மாற்றிக்கொள்வது அல்லது திருமணப் பிரார்த்தனை செய்வது சிறந்தது.

பங்குனி உத்திரம் 2026.. வேண்டுதல்கள் நிறைவேற முக்கிய விரதமுறைகள்.. முழு விவரம்!!

முருகப்பெருமான்

Updated On: 

19 Mar 2026 15:25 PM

 IST

Panguni Uthiram 2026: ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக ‘பங்குனி உத்திரம்‘ கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 01, 2026 (புதன்கிழமை) வரக்கூடிய பங்குனி உத்திரத்தன்று, பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவும், வாழ்வில் மேன்மைகள் அடையவும் எவ்வாறு விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கங்களைச் ஜோதிட நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: முருகன் வழிபாடு: பங்குனி உத்திரத்திருநாள் எப்போது வருகிறது?

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்:

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும் (உதாரணமாக மீனாட்சி – சொக்கநாதர், பார்வதி – பரமேஸ்வரன், தெய்வானை – முருகன்), சாஸ்தா பிறந்த நாளாகவும் போற்றப்படுகிறது. இந்த நாளில் மனமுருகி வேண்டினால் திருமணத் தடைகள் நீங்கும், குடும்ப ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.

விரதம் கடைப்பிடிக்கும் முறை:

பங்குனி உத்திரத்தன்று விரதமிருப்பவர்கள் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே நீராடி, தெய்வ வழிபாட்டைத் தொடங்க வேண்டும். முழுமையாக உபவாசம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். உடல்நிலை கருதி ஒருவேளை மட்டும் பழங்கள் அல்லது பால் அருந்தி விரதத்தைத் தொடரலாம்.

பங்குனி உத்திரம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த நாள். அறுபடை வீடுகள் மற்றும் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பு. ‘கந்த சஷ்டி கவசம்’ போன்ற துதிகளைப் பாராயணம் செய்வது கூடுதல் பலன் தரும். காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கோயில்களில் தரிசனம் செய்வது மிகச் சிறப்பு. இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது ஆடை தானம் செய்வது, செய்த பாவங்களை நீக்கிப் புண்ணியத்தைத் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாடு, பாராயணம்:

‘கந்த சஷ்டி கவசம்’, ‘திருமுருகாற்றுப்படை’ அல்லது ‘கந்த குரு கவசம்’ ஆகியவற்றைப் பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும். குறிப்பாகத் திருமணத் தடை நீங்க வேண்டுவோர் ‘திருமணப் பதிகம்’ ஓதலாம். பங்குனி உத்திரம் என்பது தெய்வத் திருமணங்கள் நடந்த நாள் என்பதால், அருகில் உள்ள முருகன் அல்லது சிவன் கோயில்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொள்வது குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும்.

நினைத்தது நிறைவேறப் பரிகாரங்கள்:

வேலைவாய்ப்பு, அரசுப் பணி, குடும்பப் பிரச்சனைகள் நீங்குதல் மற்றும் வங்கித் தேர்வுகள் போன்ற குறிக்கோள்களுடன் இருப்பவர்கள், இந்த நாளில் முறைப்படி விரதமிருந்து முருகனிடம் வேண்டினால் 2026ஆம் ஆண்டு மிகச் சிறந்த பலன்கள் கிட்டும் என்று ஜோதிடர்கள் கூறிகின்றனர். குறிப்பாகத் திருமணத் தடையுள்ளவர்கள் இந்நாளில் தாலிச் சரடு மாற்றிக்கொள்வது அல்லது திருமணப் பிரார்த்தனை செய்வது சிறந்தது.

மனத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் இந்தப் பங்குனி உத்திர விரதத்தை மேற்கொள்வதன் மூலம், வாழ்வில் தீராத கவலைகள் தீர்ந்து அமைதி உண்டாகும். இந்த நன்னாளைப் பயன்படுத்தி ஆன்மீக ரீதியாகத் தங்களை மேம்படுத்திக்கொள்ளுமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ரத்து..! பக்தர்கள் அதிர்ச்சி

பங்குனி உத்திரம் என்பது தெய்வத் திருமணங்கள் நடந்த நாள் என்பதால், அருகில் உள்ள முருகன் அல்லது சிவன் கோயில்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொள்வது குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்