Vastu Tips: கண்ணாடியை கொண்டு வாஸ்து தோஷம் நீக்கலாம்.. எப்படி தெரியுமா?

வாஸ்து சாஸ்திரப்படி, கண்ணாடியை சரியான இடத்தில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஒரு இடத்தின் கிழக்கு அல்லது வடக்கு சுவர்களில் வைப்பது சிறப்பான ஒன்றாகும். அதேபோல் ஒரு இடத்தின் வடமேற்கு மூலை துண்டிக்கப்பட்டால், 4 அடி அகல கண்ணாடி வைக்கலாம்.

Vastu Tips: கண்ணாடியை கொண்டு வாஸ்து தோஷம் நீக்கலாம்.. எப்படி தெரியுமா?

வாஸ்து டிப்ஸ்

Published: 

26 Jul 2025 15:50 PM

வாஸ்து சாஸ்திரம் என்பது தனிமனித வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தையும், இறக்கத்தையும் கொடுக்கக்கூடியது. அதனை சரியான திசையில் வைத்தால் பல பலன்களை பெறலாம். மாறாக தவறு செய்து வாஸ்து தோஷத்துக்கு ஆளானால் எதிர்பாராத விளைவுகளும் உண்டாகும். இப்படியான நிலையில் நிலம் சார்ந்த வாஸ்து சாஸ்திரத்தில் நாம் எதுவும் தவறு செய்து விட்டால் அதற்கான பரிகாரங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் சில விதிகள் உள்ளது. அதேபோல், கண்ணாடியை வைப்பதிலும் வாஸ்து விதிகள் உள்ள நிலையில் அதனை அறிந்து கொள்ள வேண்டும். கண்ணாடி நம் உருவத்தை பிரதிபலிக்கும் ஒரு பொருளாகும். அதனை சரியான இடத்தில் வைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் ஒளியையும் அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.அதேசமயம் தவறான இடத்தில் கண்ணாடியை வைப்பது தீங்கு விளைவிக்கும் என நம்பப்படுகிறது. எனவே ஒரு வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த வகையான கண்ணாடி மங்களகரமானது என்பதைப் பற்றி நாம் காணலாம்.

வாஸ்துவின்படி கண்ணாடிகள் நேர்மறையை ஈர்க்கும் என்பதால் இதனை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கமாக உள்ள சுவர்களில் அதாவது ஒளிரும் திசைகளில் கண்ணாடிகளை வைப்பது சிறந்தது, ஏனெனில் இந்த திசைகள் நேர்மறை ஆற்றல் மற்றும் ஒளியுடன் நேரடியாக தொடர்புடையவை. கண்ணாடிகள் இந்த ஆற்றல்களை இயற்கையாகவே அதிகரிக்க வேலை செய்வதாக நம்பப்படுகிறது.

Also Read:  இதெல்லாம் கிஃப்ட் கொடுக்காதீங்க.. பணப் பிரச்னை வரலாம்!

கண்ணாடிகளின் உதவியுடன் வாஸ்து தோஷம் நீக்கும் முறை

ஒரு வீட்டின் அல்லது வணிக இடத்தின் வடமேற்கு மூலை துண்டிக்கப்பட்டிருந்தால், அந்தப் பகுதியின் வடக்கு பக்கச் சுவரில் சுமார் 4 அடி அகலமுள்ள கண்ணாடியை வைக்க வேண்டும். இது வாஸ்து தோஷத்தை நீக்கும் என நம்பப்படுகிறது. ஒருவேளை வடகிழக்கு மூலை துண்டிக்கப்பட்டிருந்தால், வடக்குச் சுவரில் உள்ள வெட்டப்பட்ட பகுதிக்குள் கண்ணாடியை வைக்கலாம். நீங்கள் வசிக்கும் உங்கள் பிளாட் ஒரு லிஃப்ட் அல்லது படிக்கட்டுக்கு அருகில் இருந்தால், உங்கள் பிரதான கதவின் மேல் ஒரு எண்கோண கண்ணாடியை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

வீட்டின் பின்புறம் அல்லது வசிக்கும் இடத்தின் பின்னால் தேசிய நெடுஞ்சாலை இருந்தால், வீட்டின் பின்புறம் அந்த எண்கோண கண்ணாடியை நிறுவ வேண்டும் என கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் வீட்டின் பிரதான படுக்கையறையில் கண்ணாடிகளை வைக்கக்கூடாது. அதேசமயம் சாப்பிடும் அறையில் கண்ணாடி வைப்பது நல்ல பலன்களைத் தரும். வீட்டில் எப்போதும் உணவும் செல்வமும் மிகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை பின்பற்றப்படுகிறது.

Also Read: Vastu Tips: இந்த திசையில் மீன் தொட்டியை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்!

வீட்டின் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதியை விட திறந்ததாகவோ அல்லது அகலமாகவோ இருந்தால், கிழக்குச் சுவரில் கண்ணாடியை வைப்பது நல்ல பலன்களைத் தரும் என கூறப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)