கணவன், மனைவி உறவில் விரிசலா? – சாணக்யர் சொல்லும் அறிவுரை!

சாணக்கிய நீதியின்படி, உறவுகளில் ஆதிக்கம் செலுத்துவது விரிசலுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கணவன்-மனைவி உறவில், அதிகாரம் பிணைப்பை அறுத்துவிடும். மாறாக, ஒருவருக்கொருவர் மரியாதை, புரிதல், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் வெளிப்படையான உரையாடல் அவசியமாகும். உறவுகளை உரிமைகளாக கருதாமல், அன்புடன் அணுகுவதன் மூலம் மகிழ்ச்சியான, நீடித்த உறவை உருவாக்க முடியும்

கணவன், மனைவி உறவில் விரிசலா? - சாணக்யர் சொல்லும் அறிவுரை!

கணவன், மனைவி அன்பு அதிகரிக்க டிப்ஸ்

Published: 

06 Oct 2025 11:16 AM

 IST

நம்முடைய வாழ்க்கையில் உறவுகள் என்பது மிக முக்கியமானது. அது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மை செதுக்குவதாக அமைகிறது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உறவுகளில் மகிழ்ச்சி, உறவின் உன்னதத்தை புரிந்துகொள்வது, சரியான அணுகுமுறை ஆகியவை மிகவும் முக்கியமானது. ஆச்சார்ய சாணக்கியர், உறவுகளில் ஆதிக்கம் அல்லது அதிகார உணர்வு இருப்பது பெரும்பாலும் தூரத்திற்கு வழிவகுக்கிறது என்று கூறுகிறார். நாம் கயிற்றை எவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறோமோ, அதை நம்மை நோக்கி இழுக்க முயற்சிக்கிறோமோ, அவ்வளவு வலியையும் சேதத்தையும் அது நம் கைகளுக்கு ஏற்படுத்துகிறது. நீங்கள் இன்னும் அதிக சக்தியைப் பயன்படுத்தினால், கயிறு அறுந்து போகலாம். இதே கொள்கை மனித உறவுகளுக்கும் பொருந்தும் என சொல்லியுள்ளார். குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையேயான பிணைப்பு நீடிக்க வேண்டுமென்றால் அதிகாரத்தைக் காட்டக்கூடாது எனவும் சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

ஒரு வாழ்க்கைத் துணை எப்போதும் தங்கள் சொந்த ஆசைகள் மற்றும் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தால், உறவில் பதற்றம் உருவாகும், தூரம் அதிகரிக்கும். இந்த ஆதிக்க உணர்வு உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தும். அதனால்தான் கணவன்-மனைவி இடையேயான விரிசலை தவிர்க்க சில விஷயங்களை செய்ய வேண்டும் என அவர் கூறுகிறார். அதனைப் பற்றிக் காணலாம்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் யாரிடமும் சொல்லக்கூடாத 3 விஷயங்கள் என்ன தெரியுமா?

என்ன செய்ய வேண்டும்?

முதலில் உங்கள் துணையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். மனைவி என்பவள் நமக்கு கீழே தான். இணையர் என்ற மற்றொரு பெயர் மனைவிக்கு உண்டு. அதேபோல் கணவர் சொல்லிவிட்டார் எல்லாவற்றுக்கும் உடன்பட வேண்டாம். ஆட்சேபனை இருந்தால் கண்டிப்பாக காரணத்துடன் தெரிவிக்க வேண்டும்.

எந்தவொரு விஷயத்திலும் உங்கள் துணை சொல்வதை அமைதியாகக் கேளுங்கள். அவர்களின் அணுகுமுறையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் ஒரு முடிவில் உடன்படவில்லை என்றால் உங்கள் துணையின் உணர்வுகளையும் விருப்பங்களையும் மதித்து நடக்கவும், அனுசரித்து செல்லவும்.

ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டு வேலைகள் மற்றும் உறவுகள் ஒருதலைப்பட்ச சுமையாக மாறாமல் இருக்க இருவரும் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசுங்கள். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் பாராட்டுங்கள். ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் அன்பைக் காட்டுங்கள். ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.

இதையும் படிங்க:   இப்படியான உறவினர்களை பக்கத்தில் கூட சேர்க்காதீர்கள்!

சாணக்கியரின் நெறிமுறைகளின்படி, உறவுகள் உரிமைகளாக நினைக்க வேண்டும். அழுத்தமாக நினைக்கக்கூடாது. உதவி, ஒத்துழைப்புடன் தொடரும்போது உறவில் உள்ள தூரம் குறைகிறது. பிணைப்புகள் வலுவடைகின்றன. கணவன் மனைவி இடையே புரிதலும் சமநிலையும் ஒருவரையொருவர் நெருக்கமாக்குகின்றன.

உறவுகளில் இடைவெளி என்பது உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் தூரத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உறவுகளில் முறிவுக்கும் வழிவகுக்கிறது. எனவே, ஒத்துழைப்பு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம், கணவன்-மனைவி தங்கள் உறவை வலுவாகவும், மகிழ்ச்சியாகவும், நீடித்ததாகவும் மாற்ற முடியும்.

(சாணக்ய நீதி அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)