Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diwali 2025: நெருங்கும் தீபாவளி.. 12 ராசிகளும் வாங்க வேண்டிய பொருட்கள்!

Deepavali Astrology: தீபாவளி 2025 அன்று, உங்கள் ராசிக்கு ஏற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் பெறலாம். ஐப்பசி அமாவாசை கணக்கில் வரும் இத்திருநாளில், ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெள்ளி, தங்கம், வெண்கலம் போன்ற உலோகங்கள், ரத்தினங்கள், அல்லது குறிப்பிட்ட பொருட்களை வாங்கலாம்.

Diwali 2025: நெருங்கும் தீபாவளி.. 12 ராசிகளும் வாங்க வேண்டிய பொருட்கள்!
தீபாவளி ராசிபலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Oct 2025 09:12 AM IST

தீபாவளி பண்டிகை இந்து மதத்தில் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் மிக முக்கியமான விசேஷ நாளாகும். ஐப்பசி மாத அமாவாசை நாளை கணக்கில் கொண்டு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த நாளில் எண்ணெய் குளியல், புத்தாடை, இறை வழிபாடு, இனிப்புகள் செய்வது, பட்டாசுகள் வெடிப்பது என பல தரப்பட்ட செயல்களிலும் நாம் ஈடுபடுவோம். இப்படியான நிலையில் தீபாவளி நாளில் சாஸ்திர ரீதியாக 12 ராசிகளும் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

என்ன பொருட்கள் வாங்க வேண்டும்?

  1. மேஷம்: இந்த ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் இவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது வெள்ளி நாணயங்களை வாங்குவது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது. முடியாதவர்கள் பித்தளை மற்றும் செம்புப் பொருட்களையும் வாங்கலாம். இவற்றை வாங்குவது அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.
  2. ரிஷபம்: இந்த ராசியை சுக்கிரன் ஆட்சி செய்யும் நிலையில் இதில் பிறந்தவர்கள் வெள்ளி நாணயங்கள், ஸ்ரீ யந்திரம், கோமதி சக்கரம் அல்லது வைரம் பதித்த நகைகளை வாங்குவது மிகவும் நன்மை பயக்கும். இது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.
  3. மிதுனம்: இந்த ராசியின் அதிபதி புதன் எனப்படும் நிலையில் இந்த ராசிக்காரர்கள் வெண்கலப் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் அல்லது மரகதக் கற்களை வாங்கலாம். இவை ஞானம் மற்றும் செழிப்பின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. முடியாதவர்கள் குறைந்தப்பட்சம் விநாயகர் சிலையை வாங்குவது மங்களகரமானது.
  4. கடகம்:  ராசியின் அதிபதி சந்திரன் என்பதால் கடகத்துக்கு சொந்தக்காரர்கள் வெள்ளிப் பொருட்களை,  அல்லது நாணயங்களை வாங்குவது நல்லது. அவர்கள் முத்து பதித்த ஆபரணங்களையும் வாங்கலாம்.
  5. சிம்மம்: இந்த ராசியின் அதிபதி சூரியன். அதனால் தங்க நகைகள், செம்பு பாத்திரங்கள் அல்லது ரூபி ரத்தினக் கற்களை வாங்குவது அவர்களுக்கு சிறந்ததாக பார்க்கப்படுகிறது. உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், தங்க முலாம் பூசப்பட்ட பொருட்களையும் வாங்கலாம். இது ராசியினரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
  6. கன்னி: ஆட்சியாளர்புதன் என்பதால் கன்னி ராசி மக்கள் வெண்கலம், பச்சை ரத்தினக் கற்கள் அல்லது விநாயகர் சிலை வாங்குவது நல்லதாகும். இந்தப் பொருட்கள் உங்கள் புதன் கிரகத்தை வலுப்படுத்தும். அவை செழிப்பைத் தரும்.
  7. துலாம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். அதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு வெள்ளிப் பொருட்கள் சிறந்தவையாக கூறப்படுகிறது. நீங்கள் வைரம் பதித்த நகைகள், வெள்ளி நாணயம் அல்லது ஸ்ரீ யந்திரத்தை வாங்கலாம். இது நிதித் தடைகளை நீக்க உதவும்.
  8. விருச்சிகம்: செவ்வாய் அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செம்பு பாத்திரங்கள், சிவப்பு நிறப் பொருட்கள் வாங்குவது அல்லது சொத்துக்களில் முதலீடு செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்த உதவும்.
  9. தனுசு: குரு அதிபதியாக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்கள், பித்தளை பாத்திரங்கள் அல்லது ஆன்மீக புத்தகம் வாங்கினால் நல்லது. இது அவர்களுக்கு அறிவு, மரியாதை மற்றும் நிதி ஆதாயங்களைத் தரும்.
  10. மகரம்: இந்த ராசியின் அதிபதி சனி என்பதால் இரும்பு,எஃகு பாத்திரங்கள்  அல்லது வாகனம் வாங்குவது மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நீங்கள் நீலக்கல் ரத்தினத்தையும் வாங்கலாம்.
  11. கும்பம்: ராசியின் அதிபதி சனி என்னும் நிலையில் கும்ப ராசிக்காரர்கள் இரும்பு பொருட்கள், வாகனங்கள் அல்லது மின்னணு சாதனங்களை வாங்கலாம். கூடுதலாக, கருப்பு எள் அல்லது கடுகு எண்ணெயை தானம் செய்வதற்கு வாங்குவதும் மிகவும் மங்களகரமானது.
  12. மீனம்: இந்த ராசியின் அதிபதி குரு என்பதால் தங்கம், பித்தளை பாத்திரங்கள்வாங்குவது மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் தரும்.

(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)